12 புத்திசாலி பெண் தான்

2.5K 109 16
                                    

12 புத்திசாலிப் பெண் தான்

குளித்து முடித்து உடை மாற்றி அலுவலகம் செல்ல தயாரானான் ஆதித்யா. அவனுக்கு காபி கொண்டு வந்தாள் கமலி. அவள் கையிலிருந்து அதை பெற்றுக்கொண்ட ஆதித்யா, அவள் அங்கிருந்து செல்வதற்கு முன்,

"கமலி கொஞ்சம் இரு" என்றான்.

அவனைப் பார்த்துக் கொண்டு நின்ற கமலியிடம், அலமாரியில் இருந்து ஒரு இருநூறு ரூபாய் நோட்டு கட்டை எடுத்து நீட்டினான்.

"இதை செலவுக்கு வச்சுக்கோ" என்றான்.

அதை கேட்ட கமலிக்கு தூக்கி வாரி போட்டது.

"மகமாயி... என்ன இது?" என்று அதிர்ந்தாள்.

"உன்னோட பாக்கெட் மணி"

"பாக்கெட் மணியா? என்னுடைய ட்ரஸில் தான் பாக்கெட்டே இல்லையே?" என்றாள் அப்பாவியாக.

அதைக் கேட்டு தன் கண்களை சுழற்றினான் ஆதித்யா சிரித்தபடி.

"சரி, உன்னோட பர்ஸ்ல வச்சுக்கோ"

"இது எனக்கு எதுக்கு?"

"நாளையிலிருந்து நீ காலேஜுக்கு போக போற. உன்னுடைய செலவுக்கு பணம் வேண்டாமா?"

"நான் தினமும் காலேஜுக்கு டாக்ஸியில போகப் போகிறேனா?"

"நிச்சயமா இல்ல. நான் தான் உன்னை தினமும் காலேஜில் கொண்டுபோய் விடப்போறேன்"

"சாப்பாட்டை நான் வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு போக மாட்டேனா?"

"கண்டிப்பா எடுத்துக்கிட்டு போவ. தினமும் முத்து உனக்கு சமைச்சு கொடுப்பாரு. ஆனா, எதுக்காக இதையெல்லாம் கேக்குற?"

"அப்படின்னா, எனக்கு பணத்துக்கு என்ன அவசியம் இருக்கு? அதுவும் இவ்வளவு பணம் எனக்கு எதுக்கு?" என்ற போது அவள் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

தனக்கு பணம் வேண்டாம் என்று கூறும் ஒரு பெண்ணைப் பார்த்து அதிசயப்படாமல் இருக்க முடியுமா ஆதித்யாவினால்?

"உன்னுடைய சொந்த செலவுக்காக உனக்கு பணம் தேவைப்படாதா?"

இல்லை என்று தலையசைத்தாள்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now