31 ஒன்றுபட்ட மனங்கள்

2.3K 99 11
                                    

31 ஒன்றுபட்ட மனங்கள்

கமலி கூறிய *ஐ லவ் யூ* வை கேட்டு, சிலையாய் நின்றான் ஆதித்யா. அவன் பேசும் சக்தியை மொத்தமாய் இழந்து போனான். அவளை இப்படி உரைக்க வைத்தது எது? உலகம் ஒருவேளை எதிர்திசையில் சுழல்கிறதோ? தான் காண்பது கனவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொள்ள நினைத்தான் ஆதித்யா.

அவன் ஒன்றும் கூறாமல் நின்றதைப் பார்த்து குழப்பமடைந்த கமலி,  அங்கிருந்து செல்ல நினைத்து திரும்பினாள். அப்பொழுது தான், தன் சுய நினைவை பெற்றான் ஆதித்யா. அவள் கரத்தை பற்றி, அவளை அங்கிருந்து செல்லாமல் தடுத்து நிறுத்தினான். தனது கைப்பேசியை எடுத்து பிரபாகரனுக்கு ஃபோன் செய்தான், கமலியின் மீதிருந்து தன் கண்களை விலக்காமல்.

"மீட்டிங்கை தள்ளி வை..."

"ஆனா, ஆதி..."

"முடியாதுன்னா கேன்சல் பண்ணு" என்று அழைப்பை துண்டித்தான், தன் பார்வையை கமலியின் முகத்திலிருந்து துண்டிக்காமல்.

"நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம், கமலி?"

"நான் சொன்னதுக்கு அது தான் அர்த்தம், ஆதிஜி"

"ஏன்?"

"நான் அமைதியா இருக்கிறதால, எனக்கு எதுவும் தெரியாதுன்னு அர்த்தமில்ல. நீங்க எனக்காக என்ன செஞ்சிருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்..."

"நீ என்ன தெரிஞ்சுக்கிட்டே?"

"என்னோட மார்க்குக்காக எனக்கு காலேஜ்ல சீட்டு கிடைக்கல. நீங்க கொடுத்த ஒரு கோடி ரூபாய்காகத் தான் கிடைச்சிருக்கு..."

தன் கண்களை சுழற்றினான் ஆதித்யா. அவள் உணர்ச்சி வசப்படக் இது தான் காரணமா?

"ஓ... அதுக்காக தானா?" என்றான்.

"இல்ல..."

"அப்பறம்...?"

"நான் வர்ற வழியெல்லாம் உங்களை பத்தித் தான் யோசிச்சிகிட்டிருந்தேன். நீங்க ஒரு தடவை எனக்கு சொன்னிங்க, எல்லார்கிட்ட இருந்தும் நம்ம ஏதாவது ஒரு விஷயத்தை கத்துக்கணும்னு. நீங்க எப்பவுமே என்னை சந்தோஷபடுத்தி தான் பத்திருக்கீங்க... நானும் உங்களை சந்தோஷப்படுத்த நினைச்சேன். அதை எப்படி செய்றதுன்னு தான் எனக்கு தெரியாம இருந்துது."

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt