60 குழந்தையின் ஏக்கம்

2.5K 97 29
                                    

60 குழந்தையின் ஏக்கம்

பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த கமலியை பார்த்து குழம்பினாள் ஷாலினி. கமலி எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது. ஆம், திருமணத்தைப் பற்றி ஷாலினியிடம் எப்படி பேசுவது என்று தான் அவள் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால், இது கத்தியின் மீது நடப்பது போன்ற விஷயம். மிக கவனமாக கையாள வேண்டும். சிறிது பிசகினாலும் காயம் ஏற்படுத்தும். ஏற்கனவே ரேணுகாவின் மீது கோபமாக இருக்கும் ஷாலினியிடம் இது பற்றி நேரடியாக பேசினால், நிச்சயம் ஷாலினியிடம் இருந்து கிடைக்கும் பதில் *வேண்டாம்* என்பதாகத் தான் இருக்கும்.

"என்ன ஆச்சு மாமி? எதையோ ரொம்ப டீப்பா யோசிக்கிறீங்க? *டேம் இட்* க்கு அர்த்தம் கேட்டா மாதிரி,  மாமா பேசுற வேற வார்த்தைக்கு அர்த்தம் தெரியனுமா?" என்று கிண்டலாய் கேட்டுவிட்டு கலகலவென சிரித்தாள் ஷாலினி.

களுக்கென்று சிரித்த கமலி,

"நம்ம ஆஃபீஸ்ல தப்பு பண்ண ஒரு ஸ்டாஃபை  என்ன செய்யறதுங்குறதை பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கேன்" என்றாள்.

"தப்பு பண்ணவங்களை டிஸ்மிஸ் பண்ணிடுங்க" என்றாள் தன் தோளை  குலுக்கி ஷாலினி.

"அவரு ஒரு ஹார்ட் ஒர்க்கர். அவர் செஞ்ச ஒரு தப்புக்காக அவரை வேலையை விட்டு அனுப்ப முடியாது இல்லையா? அப்படி செய்ய ஆரம்பிச்சா நம்ம ஆபீஸ்ல யாருமே வேலை செய்ய முடியாது. ஏன்னா, எல்லாருமே ஏதாவது ஒரு தப்பு செய்ய தானே செய்வாங்க? அவர் மறுபடி தப்பு செய்யாம பார்த்துக்கிட்டா போதும்"

"அப்படின்னா என்ன செய்யப் போறீங்க?"

"அதைப் பத்தித் தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்"

"நீங்க கவலைப்படாதீங்க மாமி. மாமா பார்த்துக்குவாரு"

"மாமா தான் இந்த விஷயத்தில் என்னை முடிவெடுக்க சொல்லியிருக்கார்"

"ஓ..."

ஆமாம் என்று தலையசைத்தாள் கமலி.

"ஆங்... ஐடியா..."

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz