விடாமல் துரத்துராளே 4
தேவேந்திரன் மாநிறம் தான் ஆனாலும் அழகனே, ஆறடி உயரம், அலை அலையென அவனை போன்று அடங்காத கேசம், பரந்த நெற்றி, அடர்த்தியான புருவம், குத்தீட்டி போன்று கூர்மையான பார்வை, தடித்த இதழ்கள், உடற்பயிற்சி செய்ததன் விளைவால் சிக்ஸ் பேக் உடற்கட்டு என்று தன் முன் கம்பீரமான தோற்றத்துடன் ஆணழகனாக நின்று இருந்தவனை தியா இமைக்க மறந்து அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள்… அவளின் உதடுகளோ தேவேந்திரன் அப்படின்னு கரெக்டா தான் பேர் வச்சு இருக்காங்க என்று முனுமுனுத்தது…
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னையே பார்த்து கொண்டு இருப்பவளை பார்க்க தேவாவிற்கு எரிச்சலாக இருந்தது… ஏய் ஏய் என்று தேவா அழைத்தாலும் தியா காதில் அது விழவில்லை அவள் அதே நிலையில் இருந்தாள்… அதனால் தேவா தான் பிடித்திருந்த அவளின் கையை அழுத்தி பிடித்தான்... அதில் தியாவிற்கு வலி உண்டாக தெளிவு பெற்றவள், அதன் பின்பே உணர்ந்தால் தேவாவிடம் தான் மாட்டி கொண்டு நிற்பதை, ஏன் என் அறைக்குள் வந்தாய் என்று தேவா கேட்ட கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. இவ்வளவு நேரம் வடிவேல், கவுண்டமணி டயலாக் என்று கவுண்டர் கொடுத்து கொண்டு இருந்த வாய் இப்போது தேவா முன்பு டைப் அடித்தது அது வந்து அது… என்றபடி தலை குனிந்து நின்றாள்… ஏனெனில் தேவா மேல் சட்டை இல்லாமல் நின்று இருந்தான்…
என்ன திக்கி திணற எதையாவது திருட வந்தியா? என்று தேவா கேட்க,
தன்னை பார்த்து திருட வந்தியா என்று கேட்டதும் சிறு கோபம் எழுந்தது தியாவிற்கு, என்ன பார்த்தா திருடி மாதிரியா இருக்கு… நான் ஒன்னும் திருடி இல்லை… உங்க தம்பிக்கு இன்னைக்கு மேரேஜ் நடந்தது இல்ல, அவரோட ஃவொய்ப் இனியாவோட சிஸ்டர் என்றாள் கோவத்துடன், நீ யாரா வேணாலும் இரு இந்த அன்டைம்ல என் ரூம்ல உனக்கு என்ன வேலை அதுக்கு மட்டும் பதில் சொல்லு என்று கேட்டான்... வார்த்தை ஒவ்வொன்றும் அழுத்தமாக விழுந்தது… அதிலே தெரிந்தது அவன் கோவமாக உள்ளான் என்று, என்ன பதில் கூறுவாள் உன் புகைப்படத்தை தேடி வந்தேன் என்றா சொல்ல முடியும்… வசமா மாட்டிக்கிட்டோமே இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது, மம்மியவே சமாளிக்கிற நமக்கு இவரை சமாளிக்கிறதா கஷ்டம் எதையாவது சொல்லி வைப்போம் என்று மனதிற்குள் நினைத்தவள், தூக்கம் வரலை அதான் அப்படியே வீட்டை சுத்தி பார்க்கலாமேன்னு வந்தேன் என்றாள் அசடு வழிய,
YOU ARE READING
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...