விடாமல் துரத்துராளே 21
அர்ச்சனை ஏதாவது இருந்தா சொல்லுங்கோ என்ற ஐயரிடம்
சபரி ரேவதி நட்சத்திரம் என்று சொல்ல வந்த சபரிக்கு முன்பாக சௌதாமினி கிருத்திகை நட்சத்திரம் என்ற பெண்ணின் குரல் தன் அருகே கேட்க,
யாருடா இந்த அவசரகுடுக்கை என்றபடி தன் இடப்புறம் நின்று இருந்த சௌதாமினி புறம் திரும்பி பார்த்தான். அதன் பிறகு அவன் பார்வை அவள் முகத்தை விட்டு எங்குமே நகர்த்தவில்லை..
அவளின் முகத்தோற்றம் அவனை ஈர்த்ததை விட, மனதிற்குள் இறைவனிடம் வைக்க வேண்டிய வேண்டுதலை, இருகரம் கூப்பி கண்களை இறுக மூடியபடி தலையை ஆட்டி ஆட்டி உதடுகளில் முணுமுணுத்தபடி சாமி கும்பிடுவது, சிறு குழந்தை தன் தாயிடம் எனக்கு அது வேணும் இது வேணும் என்று கேட்பது போல் ரசிக்கும்படியாக இருந்தது… அவள் முகத்திலே ஒரு குழந்தை தனம் இருந்தது. அது தான் அவனை வெகுவாக ஈர்த்தது… அவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான்… செளதாமினியின் வேண்டுதல் லிஸ்ட் பெரிது போல அவள் கண் திறந்தபாடில்லை. சபரியும் பார்வையை மாற்றியபாடில்லை..
மந்திரங்களை உச்சரித்தபடி ஐயர் இவர்கள் அருகே வர, விழி திறந்தாள் சௌதாமினி. மொத்தமாக அவளிடம் விழுந்து விட்டான் சபரி அந்த மெரூன் நிற விழி உடையவளிடம்,
சௌதாமினி தீபாராதனை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு, ஐயர் தந்த விபூதியை மோதிர விரலால் எடுத்து அவள் வைத்திருந்த கல் பொட்டுக்கு மேலாக சிறிது கோடு போல் வைத்து கொண்டாள். அது அவள் எழில் முகத்திற்கு எடுப்பாகவே இருந்தது.. அவள் நகர அனிச்சையாக அவன் கால்களும் அவள் புறம் செல்ல பார்க்க முடியவில்லை… அவனை செல்ல விடாமல் கையை இழுத்து பிடித்து நிறுத்தினாள் ஹரிணி..
சிவபூஜையில் கரடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இன்னைக்கு தான் நேர்ல பார்க்கிறேன்.. கைய விடு கரடியே நான் போகனும் என் மினி போறா,
உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா சபரி? என்றாள் கடுப்புடன் ஹரிணி
YOU ARE READING
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...