விடாமல் துரத்துராளே 32தியா செயலில் தேவா அதிர்ந்து விழித்தான். இதை முத்தம் என்று கூறிட இயலாது. தேவாவை பாப்பா என்று சொல்ல விடக்கூடாது என்பதற்காக அவன் இதழ் மீது தன் இதழை அழுத்தமாக பதித்து இருந்தாள்.. அவளின் செயலில் தேவா அதிர்ந்து இருந்தான். தியாவிற்குமே அதிர்ச்சி தான் இவ்வளவு நேரம் சண்டையில் உணராத நெருக்கத்தை இப்போது உணர்ந்தாள்… இதழ்கள் நான்கும் உரசியதில் உடல் முழுவதும் மின்சாரப் பூ பூத்தது போன்று குறுகுறுப்பாய் இருந்தது. கண்கள் இரண்டும் தானாய் மூடி கொண்டது… இந்த இதழ் ஒற்றலை ஆழ்ந்த அழுத்தமான முத்தமாக மாற்ற கூறி அவளின் இதழும் மனமும் இம்சித்தது. ஆனால் வெட்கம் வந்து தடைப்போட மனமே இல்லாமல் தேவா சட்டையை இறுக்கி பிடித்து இருந்த கையின் பிடியை தளர்த்தினாள்.. ஆனால் அவள் கரங்களை விலக விடாமல் தேவாவின் ஒரு கை இறுக்கியது. மற்றோரு கரமோ கன்னத்தை பற்றி முத்தத்தை நீட்டிக்க நினைக்க லிஃப்ட் கதவு திறந்தது…
அந்த சத்தத்தில் சுயநினைவை அடைந்த இருவரும் விலகினர். ஒரு நீண்ட பெருமூச்சு இழுத்து விட்டு தலையை அழுந்த கோதி சமன்நிலை அடைந்தான் தேவா.. தியாவும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.. அவர்கள் எதிரே யாரோ நிற்பது தெரியவர, தியா பொது இடத்தில்ல இப்புடி நடந்துக்கிட்டேயேடி என்று தன் தலையில் தட்டி விட்டு எதிரே பார்க்க வெண்ணிலா நின்று இருந்தாள்…
வெண்ணிலா வை பார்த்த தியா உடனே திரும்பி தேவா முகம் பார்த்தாள். தேவா வெண்ணிலா இருவரையும் ஒரே இடத்தில் சேர்த்து இன்று தான் பார்க்கிறாள். தனது கணவன் அவனின் முன்னால் காதலியை பார்த்ததும் என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறான். அவளை இழந்து விட்டோமே என்ற வேதனையும் ஏமாற்றமும் அவன் முகத்தில் தெரிகின்றதா என பார்க்க தேவா முகம் பார்த்தாள்… அவன் முகத்தில் எதையும் படிக்க முடியவில்லை.. சாதாரணமாகவே இயல்பாகவே வெண்ணிலா வை எதிர் கொண்டான்..
ஆனால் இதுக்கு நேர்மாறாக இருந்தாள் வெண்ணிலா. அவளால் இயல்பாக தேவாவை எதிர்கொள்ள முடியவில்லை.. இந்த சூழ்நிலை அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.. அவளை மேலும் கஷ்டப்படுத்தாமல் பாப்பா வா போலாம் என்ற தேவா அங்கு இருந்து சென்றான். தியாவும் அவன் பின்னே சென்றாள்.. செல்லும் அவர்களையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள் வெண்ணிலா…

YOU ARE READING
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...