விடாமல் துரத்துராளே 3811 மாதங்களுக்கு முன்பு
டேய் அண்ணா வேற வழியே இல்லையாடா
ம்ஹூம் எதுவும் இல்லை என்பது போல சூர்யா தலை ஆட்டினான்.. தேவா மீது தப்பு இல்லை என்பதை நிரூபிக்க ஏதாவது வழி இருக்கா என தியா கேட்டதற்கு தான் சூர்யா இல்லை என தலை அசைத்தான்..
ப்ம்ச் என் தியா சலித்து கொண்டாள்..
பாப்பு ஊசி நுழையுற அளவு சின்ன இடம் இருந்தா கூட நான் இத்தனை வருஷமா விட்டு வச்சு இருப்பேனா சொல்லு பார்க்கலாம்.
ஹாஸ்பிடலுக்குள்ள இப்புடி ஒரு ஒரு தப்பு நடக்குதுன்னே எனக்கு தேவா சொல்லி தான் தெரியும்.. அதுவரை அங்கே இப்படி ஒரு தப்பு நடந்ததுன்னு எனக்கு ஏன் யாருக்குமே தெரியாது பாப்பு… அந்த சம்பவம் நடக்கும்போது அந்த ரூம்ல இருந்தவங்க ஜீவா இறந்து போயிட்டான்… திவேஷ் பையன் கழுத்தை அறுத்து கேட்டா கூட எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல மாட்டான்… காரணம் வெண்ணிலாவுக்கு விஷயம் வெளியே தெரிஞ்சுட்டா தன்னை விட்டு போயிடு வான்னு பயம். அதனால்ல அவனை கொன்றே போட்ட கூட அவன் வெளிய சொல்ல போறது கிடையாது.. அப்புறம் அங்கிருந்த மத்த டாக்டர் நர்ஸ் எல்லாரையும் அந்த மகேஸ்வரன் எங்கு எங்கேயோ அனுப்பியிருக்கான். அவங்க எங்க இருக்காங்கன்னு டீடைல் கூட யாருக்குமே தெரியாது… அப்படியே அவங்க இருக்குற இடம் தெரிஞ்சுனாலும் போய் அவங்க கிட்ட நீ செஞ்ச தப்பை ஒத்துக்கோன்னு சொன்னாலும் யாரும் ஒத்துக்க போறதில்லை. இன்னொன்னு மகேஸ்வரன் அவன் எந்த ஜென்மத்திலும் அங்கு நடந்தது அவன் வெளியே வெளியே சொல்ல போறது கிடையாது.. அந்த மகேஸ்வரன் சரியான கேடி பையன் பாப்பு கேஸ் முடிஞ்ச உடனே அந்த அந்த சம்பவம் நடந்த பில்டிங்கிலேயே ஆல்ட்ரேஷன் பண்றேன் ஆல்ட்ரேஷன் பண்றேங்கிற பேரில்ல இடிச்சு புதுசா கட்டிட்டான்… அதனால நீ நினைக்கிற மாதிரி தேவா மேல்ல தப்பு இல்ல அப்படின்னு சொல்லி நிரூபிக்கிறது என்கிறது ரொம்ப கஷ்டம் பாப்பு..

YOU ARE READING
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...