விடாமல் துரத்துராளே!! 6

1.5K 51 6
                                    


விடாமல் துரத்துராளே 6

மறுநாள் காலை  பாலகிருஷ்ணன் யமுனா வேதாசலம் வீட்டுக்கு வந்து ராகவ் இனியாவை மறுவீட்டு சம்பிரதாயத்திற்கு அழைத்து செல்ல வந்தனர்.. அவர்களுடன் தியா தன் வீட்டுக்கு சென்று விட்டாள்… அங்கு இரண்டு நாள் தங்கிய ராகவ் இனியா இருவரும் அதன் பின்பு தங்கள் இல்லத்திற்கு திரும்பி விட்டனர்...

இரண்டு மாதங்கள் ஓடி விட்டது… தியா எப்போதும் போல் கல்லூரி சென்று வந்து கொண்டு இருந்தாள்… ஆனால்  இந்த இரண்டு மாதத்தில் தேவா பற்றி எண்ணம் எழாமல் இல்லை… தேவாவை  ஏன் வீட்டில் உள்ளவர்கள் இவ்வாறு வெறுக்கிறார்கள்… என்ன காரணமாக இருக்கும்… அவன் இந்த வீட்டில் தங்குவதில்லை என்றால், வேறு எங்கு இருப்பான்… என்ன செய்து கொண்டு இருப்பான்… ஏன் அவனுக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவனை பற்றி விடை தெரியா  நிறைய கேள்விகள் மனதில் எழுந்தது… அதற்கு அவளுக்கு விடை தெரிய வேண்டும்… ஆனால் யாரிடம் கேட்பது, அவன் வீட்டில் உள்ள யாரிடமும் கேட்க முடியாது… கேட்டாலும் அவர்கள் யாரும் பதில் சொல்ல போவது கிடையாது… இனியா விடம் கேட்டால் அவளும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டாள்… அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலை பார்க்க முடியவில்லை... அதனால் தேவாவை அடுத்த முறை பார்க்கும் போது அவனிடமே நேரடியாக கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்… ஆனால் அவனை தான் பார்க்க முடியவில்லை… அதனால் தேடி கொண்டு இருக்கிறாள்...

இன்று தியா பின்னே அமர்ந்து வர அவள் தோழி ஹரிணி ஸ்கூட்டி ஓட்டி கொண்டு இருக்க இருவரும் பேசி கொண்டு வந்தனர்…

ஏய் ஹனி ஹனி சீக்கிரம் ப்ரேக் போடுடி  ப்ரேக் பிடி என்று கத்தினாள் தியா… அதில் பயந்த ஹரிணி அவசரமாக ப்ரெக் போட்டு வண்டியை நிறத்தியவள் என்னடா ஏன் சத்தம் போட்ட  என்று தியா வை கேட்க,

தியா ஹரிணி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வண்டியை விட்டு வேகமாக இறங்கியவள் சாலையை கடந்து ஓடினாள்… ஹரிணியும் ஏதோ பிரச்சனை என்று எண்ணி அவள் பின்னே ஓட,

விடாமல் துரத்துராளே!!Donde viven las historias. Descúbrelo ahora