பாகம் 45மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது.. யாருக்கு அது அழகான விடியலோ என்னவோ, தேவாவிற்கு அது சில வருடங்களுக்கு பிறகு வந்த அழகான விடியல் தான்..
மெதுவாக கண் விழித்த தேவாவுக்கு நேற்று இரவு நடந்தது எல்லாம் நினைவு வர உதட்டில் லேசான புன்னகை தோன்றியது.
பொழுது ஏன்டா விடிஞ்சது எழுந்து என்ன பண்ண போறோம் என்று தியா அவன் வாழ்க்கைக்குள் வரும் வரை ஒரு வித அலுப்புடன் எழுபவன் மனதில் இன்று உற்சாகமும் துள்ளலும் மகிழ்ச்சியும் கரை புரண்டு ஓடியது…பல வருடம் கழித்து அவனின் காலை பொழுது இவ்வளவு அழகாக விடிந்து உள்ளது. இந்த மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்துக்கும் காரணமானவள், அவன் எவ்வளவோ அவளை தன்னை விட்டு விலக்க பார்த்தும் விலக்கி வைத்தும் துரத்தியும் கூட, விடாமல் அவனை துரத்தி துரத்தி வந்து, அவன் தன்னை சுற்றி போட்டு வைத்திருந்த இரும்புதிரையை உடைத்து, அடம்பிடித்து வம்படியாக அவன் வாழ்க்கைக்குள்ளேயும் அவன் மனதிற்குள்ளும் நுழைந்தவளை தன்னுடைய பாப்பாவை பார்த்தான்..
அவன் மார்பை தலையணையாக்கி அவனை அணைத்தபடி தூங்கி கொண்டு இருந்தாள்… அவளின் முகத்தை பார்த்தான்.. நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் பார்வையை கீழ் இறக்கி விழி, மூக்கு தொடர்ந்து இதழ்களை பார்க்க, இதழ்களோ அவனால் காயம்பட்டு கோவை பழமாக சிவந்து இருந்தது.. அதை விரல் கொண்டு லேசாக வருடியவன், இந்த உதடு தானே பேசி பேசியே என்னை கவித்துச்சு அதான் அதுக்கு தண்டனை கொடுத்து இருக்கேன் என்றவன் அந்த காயத்திற்கு மருந்திட உதட்டில் மென்மையாக முத்தமிட்டு விலகியவனுக்கு அடங்கி இருந்த தாபம் மேலிட, வேண்டாம் வேண்டாம் ஏற்கெனவே ரொம்ப சோர்வா இருக்கா ரெஸ்ட் எடுக்கட்டும் என்றவன் கை நீட்டி கட்டிலின் கீழ் இருந்த தன் டீ ஷர்ட்டை எடுத்து அணிந்து விட்டு, தியாவிற்கு போர்வையை நன்றாக போர்த்தி விட்டு மீண்டும் ஒருமுறை நெற்றியில் முத்தமிட்டு விட்டு எழுந்த தேவா பாத்ரூம் சென்று குளித்து விட்டு கீழே கிச்சனுக்கு சென்றான்..
DU LIEST GERADE
விடாமல் துரத்துராளே!!
Romantikதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...