விடாமல் துரத்துராளே 1

3.3K 53 8
                                    

விடாமல் துரத்துராளே 1

காலை நேரம் 5 மணி கோவை மாநகர் ஆர்.எஸ்.புரம் பகுதி மேற்தரப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்று கூட சொல்லலாம்... அங்கு தான் அமைந்திருந்தது அந்த அழகான பங்களா... வீட்டினுள் தனது அறையின் மெத்தையில் அமர்ந்து தனது விரல் நகங்களை கடித்து கொண்டு இருந்தாள் இனியா மிக பதட்டத்துடன், முகத்தில் இருந்த சோர்வும் கண்களில் தெரிந்த சிவப்பும் கூறியது இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை என்று, அவளின் அருகே சாந்தமான முகத்துடன் உறங்கும் போது கூட உதட்டில் ஒட்டி இருக்கும் சின்ன சிரிப்புடன் குழந்தை போன்று‌ உறங்கி கொண்டு இருந்தாள் நம் நாயகி திரவியா...

இனி கடிக்க நகமே இல்லை என்னும் அளவு விரல்களை கொறித்து முடித்த இனியா, திரும்பி தன் அருகே படுத்து இருக்கும் திரவியாவை பார்த்தவள், குட்டி, குட்டி எழுந்திருடி என்று அவள் கையை தட்டி அழைத்தாள்... திரவியா எந்த அசைவும் இன்றி படுத்து இருக்கவே, இப்போது குட்டி குட்டி என்று அழைத்தபடி அவளை உலுக்கினாள்... இதுக்கு எல்லாம் அசைவேனோ என்றபடி புரண்டு படுத்து தனது உறக்கத்தை தொடர்ந்தாள் திரவியா...

இத்தனை தடவை எழுப்பியும் எப்படி தூங்குறா பாரு கும்பகர்ணனுக்கு குளோஸ் ரீலேஷன் மாதிரி என்று தலையில் அடித்து கொண்ட இனியா, இவள என்றபடி மெத்தையின் அருகே இருந்த டேபிளில் மீது வைக்கப்பட்டு இருந்த வாட்டர் பாட்டில் எடுத்து சிறிது அளவு தண்ணீரை கைகளில் எடுத்து திரவியா முகத்தில் தெளிந்தாள்...

குளிர்ந்த நீர் தன் முகத்தில் பட்டதும், அய்யோ அம்மா வீட்டுக்குள்ள மழை பெய்து என்றபடி அடித்து பிடித்து எழுந்து அமர்ந்த திரவியா முன்பு தனது இரண்டு விரல்களை நீட்டி தியா குட்டி இந்த விரல்ல ஒன்னு தொடுடா என்ற இனியாவை முடிந்த மட்டும் முறைத்து கொண்டு இருந்தாள்...

அவள் முறைப்பது புரியவே சாரிடா நான் உன் செல்ல அக்கா தானே, உன் அக்கா ரொம்ப ரொம்ப கன்பூசியஸா இருக்கேன்... டாடி காலையிலே என்ன முடிவு சொல்லுவாங்களோ பயமா இருக்கு... அதான் டாடி எஸ் சொல்லுவாங்களா, நோ சொல்லுவாங்களா இந்த இரண்டு விரல்ல ஒன்னு தொட்டு சொல்லுடா என்று இனியா கேட்டதும்,

விடாமல் துரத்துராளே!!Onde histórias criam vida. Descubra agora