விடாமல் துரத்துராளே 17

1.4K 41 2
                                    

விடாமல் துரத்துராளே 17


தேவா வெண்ணிலா நிச்சயதார்த்திற்கு ஒரு மாதம் முன்பு :

இன்னைக்கு ஈவ்னிங் உங்க பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். இப்ப அவங்களுக்கு கம்ளிட்லி ஆல் ரைட்.‌ அவங்க டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தா சீப் டாக்டர் கூட இன்னைக்கு கிளம்ப சொல்லிட்டாங்க என்று தியாவின் மருத்துவ அறிக்கையை பார்த்து கொண்டே யமுனாவிடம் கூறினான் ஜீவா…

அப்போது தியாவிற்கு 15 வயது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள். இதோ ஒரு வாரம் முன்பு பயங்கர காய்ச்சல் தியாவிற்கு. எழுந்திருக்கவே முடியாத அளவு சோர்ந்து போனவளை பார்த்து பதறி பயந்து போன பாலகிருஷ்ணன் யமுனா இருவரும் உடனடியாக ஆரோக்கியம் மருத்துவமனை அழைத்து வந்தனர். அங்கு அவளை பரிசோதித்தது டாக்டர் ஜீவா. அவன் தான் ஆரோக்கியம் மருத்துவமனையில் புற நோயாளிகளை கவனிப்பான்… 105 டிகிரி காய்ச்சல் தியாவிற்கு இருந்தது. அதனால் அவளுக்கு  இரத்த பரிசோதனை சிறுநீரக பரிசோதனை எல்லாம் பார்க்கப்பட்டது.‌ பரிசோதனை முடிவை பார்த்த ஜீவா அவளுக்கு டெங்கு ஃபீவர் உள்ளதை அறிந்துஉடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க கூறினான். பயந்து போன தியா பெற்றோர்கள் அவளை மருத்துவமனையில் அனுமதிக்க இதோ ஒரு வாரம் கடந்து தியாவிற்கு காய்ச்சல் குறைந்து பரிபூரணமாக குணமடைந்ததால் வீட்டுக்கு அழைத்து செல்ல கூறுகிறான் ஜீவா…

இனி எந்த தொந்தரவும் இருக்காது இல்ல டாக்டர்… சாப்பிடுறதுக்கு எல்லாமே கொடுக்கலாமா?  என்று ஒரு தாயாக மகள் உடல்நிலை பற்றி மீண்டும் ஒரு முறை கேட்டார் யமுனா..

எந்த ப்ராப்ளமும் இல்ல. நார்மலா நீங்க எப்பவும் கொடுக்கிற எல்லா ஃபுட்டையும் கொடுக்க என்று ஜீவா கூறியதும் சரி என்ற யமுனா தியா வை ரெடியாக இருக்கும்படி கூறி விட்டு பில்லை கட்டி டிஸ்சார்ஜ் பார்மாலிட்டி முடிக்க ரிசப்ஷன் சென்றார்...

யமுனா சென்றதும் அங்கிருந்த தியா ஜீவாவை பார்த்து முறைக்கு ஆரம்பிக்க. ஜீவா தியாவின் செயலை பார்த்து சிரித்தான்… இந்த ஒரு வாரத்தில் தியா தன்னை கவனித்து கொண்ட டாக்டர் நர்ஸ் அனைவரையும் தன் பேச்சால் நண்பர்களாக்கி இருந்தாள். அதில் ஜீவாவும் ஒருவனே. தேவா இதய சம்மந்தப்பட்ட நோயாளிகளை மட்டுமே பார்ப்பதால் தியா தேவாவையோ தேவா தியாவையோ இந்த ஒரு வார காலத்தில் பார்த்தது இல்லை.‌..

விடாமல் துரத்துராளே!!Onde histórias criam vida. Descubra agora