விடாமல் துரத்துராளே 26

3.1K 72 36
                                    

விடாமல் துரத்துராளே 26

டேய் இப்ப என்னடா உனக்கு பிரச்சினை… நாங்க எதிர்பார்க்கலைடா இப்படி எல்லாம் நடக்கம்னு, பாப்பு மேல்ல ஏன்டா கோவப்படற, அவ என்ன பண்ணுனாடா, எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த போலிஸ்காரன் தான்.. பெருசா எதுவும் தப்பா நடக்கலையே, நல்லா விஷயம் தானே நடந்து இருக்கு…அதை நினைச்சு சந்தோஷ் படும் என்று சூர்யா தேவாவின் கோவத்தை தணிக்க பார்க்க,

தேவா விற்க்கு ஏனோ கோவம் அடங்க மறுத்தது… கோவம் கோவம் பயங்கர கோவம் தியா வை போலிஸ் ஸ்டேஷனில் வச்ச அந்த போலிஸ் மீது, அவளை அவதூறாக பேசிய அத்தனை பேரின் மீதும் கொல்லும் கோவம் வந்தது… அவர்கள் அப்புடி செய்வதற்கு வழி வகுத்து கொடுத்த இந்த இரண்டு முட்டாள்களின் (சூர்யா, தியா)மீதும் அந்த கோவம் திரும்பியது…

அதே கோவத்துடன் என்ன சொன்ன?  தப்பா எதுவும் நடக்கலையா, ஓ… இப்ப அவளுக்கு நடந்த எதுவும் உனக்கு தப்பா படலை அப்புடி தானே, அவளை பெத்த அப்பா கேட்டாறே, இந்த வயசுலையே உனக்கு ஆம்பளை தேவைப்படுதான்னு அது உனக்கு தப்பா படலையா, உன் அக்கா மஞ்சு கேட்டதே அர்த்த ராத்திரியில் ஆம்பளைய தேடி போய் இருக்கா என்ன பொண்ணோன்னு சொன்னது உனக்கு தப்பா படலையா, எப்புடி உனக்கு அது எல்லாம் தப்பா படும் ஏன்னா அவ ஒன்னும் உன் கூட பொறந்த தங்கச்சி இல்லையே, அப்புடி உன் சொந்த தங்கச்சியா இருந்தா இப்புடி நடுராத்திரியில் ஒரு பையனை பார்க்க வெளியே கூட்டிட்டு வருவியா, யாரோ வீட்டு பொண்ணுன்னு தானே, இப்புடி எல்லாம் நடந்துக்கிட்ட சுயநலமா,  உன் குற்ற உணர்ச்சியை தீர்த்துக்க,இவளை பயன்படுத்திக்கிட்ட என்று தேவா கோவத்தில் வார்த்தையை கொட்டி விட,

பாவா ப்ளீஸ் ஏன் இப்புடி எல்லாம் அண்ணாவை பேசுறீங்க என்ற தியா வை தடுத்த சூர்யா,

டேய் என்னடா ,என்ன ஓவரா பேசுற பாப்புவை பயன்படுத்திக்கிட்டேன் குற்ற உணர்ச்சி அது இதுன்னு என்ன உளற சொல்லு என்று தேவாவின் கோபத்துக்கு நிகரான கோவத்துடன் சூர்யா கேட்க,
அது மேலும் தேவாவிற்கு கோவத்தை அதிகரித்தது…

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now