விடாமல் துரத்துராளே 31தேவா எங்கு திரும்பி வரவே கூடாது என்று முடிவு எடுத்து இருந்தானோ இன்று அதை ஆரோக்கியம் மருத்துவமனையில் கால் எடுத்து வைத்திருக்கின்றான் தியாவுக்காக, நேற்று அவன் திருமணம் முடிந்ததிலிருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்.. எதர்சையாக அந்த நேரத்தில் போலீஸ் அங்கு வந்து இருக்க வாய்ப்பில்லை, நிச்சயம் இதில் வேறு ஏதோ காரணம் உள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்ட சபரியை விசாரிக்க சொன்னான். சபரி ஹர்ஷா தான் என்று கூறியதுமே தேவாவுக்கு முதலில் அதிர்ச்சி தான். ஹர்ஷா இவ்வளவு கீழிறங்க மாட்டான் என்று தோன்றியது. ஆனால் சில நொடிகளிலே யாரையுமே நம்ப கூடாது என்று அவனின் இந்த 5 வருட வாழ்க்கை இடித்துரைத்தது.. அது போக இப்போது ஹர்ஷா திவேஷ் நெருக்கத்தில் உள்ளான். அதனால் ஹர்ஷா இதை செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் நம்பினான். நேற்று தியா போலீஸ் ஸ்டேஷனில் அழுத முகமாக நின்று இருந்த காட்சியே திரும்ப திரும்ப கண்முன் வந்தது. அதனால் தியாவையும் இழுத்து கொண்டு இங்கு வந்து விட்டான்…
தேவாவும் தியாவும் ஹர்ஷா எதிரே நின்று இருந்தார்கள்..
தியா விஷயம் அறிந்து தான் தேவா வந்து இருக்கின்றான் என்பது புரிந்தது ஹர்ஷாவுக்கு, தன்னிச்சையாக இருக்கையில் இருந்து எழுந்து நின்றான். 5 வருடங்களுக்கு முன்பு வரை எப்போது இங்கு வந்தாலும் தேவா அண்ணா தேவா அண்ணா என்று தேவா பின்பே சுற்றியது நினைவுக்கு வந்தது ஹர்ஷாவுக்கு, தன் தலையை உலுக்கி நினைவை எல்லாம் ஓரம் தள்ளி வைத்தான். அதன் பின்பு தேவாவை பற்றி அவனிடம் கூறப்பட்ட வதந்திகளை நினைவில் கொண்டு வந்து நிறுத்தினான். தேவா மீது கோவம் ஏற்பட்டது நிமிர்ந்து நேராக நின்றான்…
தேவாவும் அவனை கூர்மையாக பார்த்தபடி அந்த அறைக்குள் வந்தான். இருவரும் எதிரெதிரே நின்று இருந்தனர். இருவருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பார்வையால் ஒருவரை ஒருவர் எரித்துக் கொண்டு நின்று இருந்தனர்..
YOU ARE READING
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...