விடாமல் துரத்துராளே 25

4.4K 80 59
                                    

விடாமல் துரத்துராளே 25

இரவு 11:30 தேவா தனது வீட்டில் படுத்து இருந்தான். உறக்கம் தான் வருவேனோ என்று இருந்தது.. மனம் தேவையில்லாத சிந்தனைகளில் உழன்றது… அவனை வெறுமை சூழ்ந்து இருந்தது.. தனிமையை விரும்பி ஏற்றவன் தான், ஆனால் ஏனோ சமீப காலமாக இந்த தனிமை அவனுக்கு பிடிக்கவில்லை… இவ்வளவு நாள் இந்த தனிமையில் இருந்து தப்பிக்க அவனுக்கு கைக்கொடுத்த மது மாது இரண்டையுமே சமீப காலமாக அவன் நாட வில்லை… அதுவும் அவனுக்கு பிடிக்காமல் போனது… அவனின் மனம் எதையோ எதிர்பார்க்கின்றது அது என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக அதை தெரிந்து கொள்ள அவன் விரும்பவில்லை.. 

அவனின் மொபைல் சிணுங்கியது.. அதை ஆன் செய்து காதில் வைத்தான். 

தேவா என்ற குரல் கேட்டதுமே ம்மா எப்புடி இருக்கீங்க என்று கேட்டான்… 

தேவா தேவா என்ற சூர்யாவின் குரல் கொஞ்சம் பதட்டமாக இருந்தது.. 

என்னடா என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் குரல், டேய் தேவா பாப்பு பாப்புக்கு, அவனால் மேற் கொண்டு பேச முடியவில்லை,

சூர்யா திரவிக்கு என்னாச்சு சொல்லி தொலைடா சூர்யாவிடம் இருந்த பதட்டம் தேவாவையும் தொற்றி கொண்டது. இருவருமே பதட்டத்தில் இருந்ததனால் தேவாவின் அழைப்பை யாருமே கவனிக்கவில்லை…

தேவா அது வந்து அது வந்து பாப்பு நான் பாப்பு பதற்றத்தில் வார்த்தை வரவில்லை சூர்யாவிற்கு, என்னடா நீ சொல்ற புரியுற மாதிரி என்ற தேவா தனது கார் சாவியை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்… அவனுக்கு புரிந்தது ஏதோ ஒரு பிரச்சினை என்று,

தேவா சாரிடா அது வந்து நாளைக்கு உன் ப்ர்த்டே வருதுல, அதனால பாப்பு உனக்கு சர்ப்ரைஸா இன்னைக்கு நைட்டு 12 மணிக்கு கொண்டலாம் சொல்லி ப்ளான் பண்ணாடா. நான் எவ்வளேவோ வேண்டாம் சொன்னேன்டா. ஆனா பாப்பு தான் அப்பா, அம்மா நைட்டு 10 மணிக்கு ஊர்க்கு போறாங்க. அவங்க சொந்த ஊர்ல கோவில் விசேஷம் அதற்காக உங்க வீட்டு ஆளுங்க. அவங்க வீட்டு ஆளுங்க எல்லாரும் ஊருக்கு போறாங்க. வரதுக்கு இரண்டு நாள் ஆகும் ப்ராப்ளம் வராது சொல்லி ரொம்ப கெஞ்சி கேட்டதால சரின்னு ஒத்துக்கிட்டேன்டா. 

விடாமல் துரத்துராளே!!Donde viven las historias. Descúbrelo ahora