விடாமல் துரத்துராளே!! 7

1.4K 49 12
                                    

விடாமல் துரத்துராளே 7

(இந்த கதையில் வரும் மருத்துவமனை பெயர், கதாபாத்திரங்கள் பெயர் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் என் கற்பனையே... கதையின் சுவாரஸ்யத்திற்காக சேர்த்து கொண்டது...)

ஆரோக்கியம் மருத்துவமனை இரண்டு மணி நேரத்திற்கு முன்பு….

கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள 20 அடுக்குமாடிக் கொண்ட மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனை… கோவை மக்களின் முதல் தேர்வு இந்த மருத்துவமனை தான்…  அந்தஅளவு தரமானதாக இருக்கும் இங்கு வைத்தியம்… தமிழ்நாட்டின் அனைத்து வியாதிகளுக்கும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இங்கு இருக்கின்றனர்… இந்த மருத்துவமனையின் இன்னோரு சிறப்பு பணக்காரர்கள் ஏழைகள் என்ற பாகுபாடு இங்கு பார்க்க மாட்டார்கள்… அனைவருக்கும் ஒரே மாதிரியாக மருத்துவம் பார்க்கப்படும்…. இன்னும் சொல்லப்போனால் ஏழை எளிய மக்களுக்கு அவர்களிடம் பணம் இல்லை என்ற போதும் ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் எவ்வளவு பெரிய ஆப்ரேஷன் என்றாலும் இலவசமாக செய்யப்படும்…

அந்த மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் மகேஸ்வரன் நீண்ட அந்த வராண்டாவில் சற்று பதட்டமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தார்… அவரின் மகன் டாக்டர் கார்த்திக்கோ( தேவா தங்கை இந்துமதி கணவன்) கோவமாக அங்கு நின்று இருந்த திவேஷை முறைத்து கொண்டு நின்றான்… அந்த வராண்டாவில் மேலும் வெண்ணிலாவும் அங்கு பணிபுரியும் இரு டாக்டர்களும் பதட்டத்துடனும் குழப்பத்துடனும் நின்று இருந்தனர்...‌

அனைவரும் அமைதியாக இருக்க அங்கு இருந்த மூத்த மருத்துவர் நாராயணன் சார் இப்படியே யோச்சிட்டே இருந்தா என்ன பண்றது மினிஸ்டருக்கு உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு… இமீடியட்டா ஓபன் ஹார்ட் சர்ஜரி இன்னைக்கு பண்ணியே ஆகனும் டீலே பண்ணா அது அவருக்கு ரொம்ப ஆபத்தா முடியும்… அது மட்டுமில்லை நம்ம ஹாஸ்பிடல் பேரும் கெட்டு போயிரும் சார் என்றார்…

நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்றான் திவேஷ் மெதுவான குரலில்,

விடாமல் துரத்துராளே!!Место, где живут истории. Откройте их для себя