விடாமல் துரத்துராளே 18நேற்று பள்ளி சென்ற மகளை காணாமல் அழுது அழுது மயக்கத்திற்கே சென்று விட்டார் யமுனா. இனியாவும் தங்கையை காணாது அழுதபடியே தாய் அருகில் இருந்தாள். பாலகிருஷ்ணன் மகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். போலீஸில் புகார் அளித்தும் பயனில்லை. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. பணத்திற்காக தியா கடத்தப்படவில்லை என்பது காவல் துறைக்கு நன்றாக தெரிந்தது. பணத்திற்காக கடத்தி இருந்தால் பாலகிருஷ்ணனனை தொடர்பு கொண்டு இருப்பார்கள். வேறு தப்பான தொழிலில் செய்ய ஏதாவது கும்பல் கடத்தி இருக்குமா, இலீலை தொழில் முறை போட்டியில் யாராவதே கடத்தி இருப்பார்களா என்று காவல் துறை விசாரிக்க அதுவும் இல்லை. காவல் துறை கண்டு பிடிக்க முடியாதபடி எந்த ஒரு தடயமும் இல்லாமல் கனகச்சிதமாக தியா வை கடத்தி உள்ளனர்.
டேய் என்னடா இவ்வளோ கூல்லா உக்கார்ந்து சாப்பிட்டு இருக்க. உனக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா என்றான் திவேஷ் ஜீவாவை பார்த்து
எதுக்குடா பயப்படனும்,
என்னது எதுக்கு பயப்படனுமா? இப்ப நாமா பண்ணிறக்கறதும். இனிமே பண்ண போறதும் எவ்வளவு பெரிய விஷயம். மாட்டுனா காலம் முழுக்க ஜெயில்ல உக்கார்ந்து களி திங்கனும்..
அது எல்லாம் மாட்ட மாட்டோம்டா. எனக்கு இது என்ன புதுசா நான் ஏற்கனவே இந்த மாதிரி இரண்டு மூணு தடவை பண்ணி இருக்கேன்.. மாட்டாவா செஞ்சேன்.. யாருக்கும் சந்தேகம் வராமா எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்ணி இருக்கேன் என்றான் ஜீவா சாப்பிடப்படியே,
நீ இவ்வளோ நாளா மாட்டாததற்கு காரணம் கார்த்திக் மகேஸ்வரன் சார் உன் மேல்ல வச்சு இருக்க நம்பிக்கை. அப்புறம் இன்னோரு விஷயம் நீ இவ்வளோ நாள் கை வைச்சு இடம் எல்லாம் படிக்காதவங்களும் ஆதரவுக்கு யாரும் இல்லாத ஜனங்க மேல்ல. ஆனா இந்த பொண்ணு அப்புடி இல்ல பெரிய இடம். இந்நேரத்திற்கு இந்த பொண்ணை காணோம்னு போலிஸ்ல கம்பளைண்ட் பண்ணி இருப்பாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜீவா. எதுவும் வேண்டாம்டா இந்த பொண்ணை விட்டுருலாம் என்றான் திவேஷ். அங்கு மயக்கத்தில் இருந்த தியா வை கை நீட்டி காண்பித்தபடி,
YOU ARE READING
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...