நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா -1

1.4K 25 0
                                    

COPYRIGHT WARNING!!!
முக்கிய குறிப்பு !

எஸ்.ஜோ அல்லது எஸ்.ஜோவிதா எனும் பெயரில் வரும் எல்லா நாவல்களும் இந்தியாபிரான்ஸ் உட்பட 262 நாடுகளில் COPYRIGHT பெற்ற நாவல்கள்.

எனவே எந்த நாவலையும் ஆசிரியரின் அனுமதி இன்றி பிரதி எடுக்கவோ, அச்சு எடுக்கவோ,
வேறு எந்த இணையத்தளத்திலாவது பிரசுரிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
மீறுவோரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாயம் 1

''கோதை...கோதை..'' கார் போர்டிகோவில் அமைதிக்கு வரும் முன்னே ராமநாதன் குரல் கொடுத்தபடி கதவை திறந்து கொண்டு இறங்கினார். இல்லை குதித்தார் என்றே சொல்ல வேண்டும். கடந்த ரெண்டு ஆண்டாக தொலைந்து போன சந்தோஷம் மொத்தமாக முகத்தில் கொப்பளிக்க இருபது வயது இளைஞன் போல் துள்ளிக்கொண்டு வந்த கணவரை கேள்வி தாக்கிய முகத்தோடு எதிர்கொண்டாள் பூங்கோதை.

''கோதை...சர்க்கரை கொஞ்சம் கொடேன்...'' கோட்டை கழட்டி சோபாவில் வீசியவராய் மனைவியின் தோளைத்தொட்டு முகவாயை நிமிர்த்தினார். இருண்டு சோகம் அப்பிக் கிடந்தவளின் முகத்தில் இருந்து உணர்வுகளை படித்தவராய்-

''என்னோட சந்தோஷத்துக்கு உனக்கு காரணம் தெரியணும்? சொல்றேன்..இப்படி வந்து உட்காரு..'' சோபாவில் தானும் அமர்ந்து பக்கத்தில் மனைவியை அமர்த்தியவராய்,

''கோதை..ரெண்டு வருஷமா..இருண்டு போயிருந்த நம்ம வீட்டுக்கு ஒரு விடிவு வரப்போகுது...எல்லா சந்தோஷத்தையும் தொலைத்துவிட்டு நடைப்பிணமாக வாழ்ந்த வாழ்;க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி..'' அவர் நேரிடையாக விஷயத்தை சொல்லாமல் சுற்றி வளைக்க கோதை சலிப்புடன் எழ முற்பட்டாள்.

''சரிம்மா...! நேரா நான் விஷயத்துக்கு வர்றேன்..! என்னோட பிரண்டு கங்காதரன் இருக்கான்ல...அவனோட பையன்        அக்ஷய்க்குத்தான் நம்ம பொண்ணு நிலாவை கேட்டுகிட்டிருந்தான் இல்லையா? ஆனா நாம ஒண்ணு நினைக்க விதி வேறையா  நினைச்சுடுத்து...! விடு அது முடிஞ்ச கதை! நடந்த சம்பவத்ததுக்கு அப்புறம் எப்படி வாய் திறக்குறதுன்னு தயங்கிட்டிருந்தோம்...நிலாவோட போக்கை பார்த்துட்டு சரிவராதுன்னு எனக்கு தோணிச்சு..கங்கா வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த உடனே மீட் பண்ணனும்னு நினைச்சிட்டிருந்தேன். முடியாம போயிடுச்சு. ஆனா  எதிர்பாராத விதமாக இன்று சந்திக்க நேர்ந்தது.... அவனும் நான் வாய் திறக்க காத்திட்டிருந்தவன் போல சரின்னுட்டான்...அக்ஷய் கூட கல்யாணம் வேண்டாம்னு சொல்லிகிட்டிருந்தான்... அவனை எப்படியோ சம்மதிக்க வைச்சுட்டான்..அடுத்த முகூர்த்தத்திலே நிலாவுக்கும் அக்ஷய்க்கும் கல்யாணம்...''உற்சாகத்துடன் கூறினார்.

''பிள்ளையாரப்பா..நான் கேட்பது நல்ல சேதி தானா?'' சந்தோஷத்தோடு கணவரை பார்த்தவள் முகம் உடனே வாடியது.

''ஆமாம் கோதை நீ உன் பிள்ளையார்கிட்டே வேண்டிகிட்டது வீண் போகலை..'' நிம்மதியுடன் கூறினார் ராமநாதன்.

''என்னங்க...நம்ம நி...நிலா இ..இதுக்கு?''

''என்ன நிலா இதுக்கு சம்மதிப்பாளா? என்று தானே கேட்க வர்றே?''

''ம்..'' கண்களில் கலக்கத்துடன் அவரைப் பார்த்தாள்.

''சம்மதிச்சே ஆகணும்...சம்மதிக்க வைப்பேன்..இத்தனை வருஷமும் அவ பேச்சை கேட்டுகிட்டு இருந்தது போதும். இத்தனை நாளும் பாசமான அப்பாவை அவ மிரட்டி பணிய வைச்சுட்டிருந்தா...இனி பொறுப்பான அப்பாவை அவ வழியிலேயே போய் காரியத்தை முடிச்சு காட்டுறேன்...'' ராமநாதன் சவால் விட கோதை முகம் குழப்பத்துக்கு போனது.

''நீ எதுக்கு வீணா கண்டதை யோசிச்சுகிட்டுருக்கே?''

''இல்லைங்க..எத்தனை வரன் பார்த்தோம். ஒன்னைக்கூட அவ ஏறெடுத்தும் பார்க்கலை..ஒன்று தனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைங்கிற மாதிரி இருப்பா. இல்லைன்னா அவங்க முன்னாடி தன் கடந்த காலத்தை பத்தி சொல்லியே பாதிப்பேரை நம்ம வீட்டுப் படியேறும் முன்பே தடுத்துடுவா.. இதுவும்...'' கோதையை இடை மறித்தவராய்,

''அது எல்லாம் வேற்று மனிதர்கள்...என்ற பட்சத்தில். இது கங்காதரனும், பையனும் நம்மையும் நம்ம குடும்பத்தையும் நல்லா தெரிஞ்சு, புரிஞ்சு கொண்டு இருக்கும் குடும்பம் அவனோடது.. இத்தனை நாளும் அவன் தயங்கிட்டிருந்தது நாம மறுத்திடுவோமோ? என்று தான்.. சகலத்தையும் சொல்லித்தான் அக்ஷய்கிட்டே சம்மதம் வாங்கியிருக்கான்..அதனால நிலாவோட எந்த ஸ்டெப்பும் அக்ஷய்கிட்டே எடுபடாது..''  நம்பிக்கையுடன் கூறினார்.

''கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க..இப்பவே என் பொண்ணோட கல்யாணம் நடந்த மாதிரி மனசு நிறைஞ்சுருக்கு..ஆனா...''

''என்ன ஆனா?''

''நி..நிலாவை நினைச்சா அந்த சந்தோஷம் எல்லாம் தூரம் போயிடுத்து..''

''நிலா விசயத்தில இனி நான் கட் அண்ட் ரைட்தான்...அவ வர்ற நேரம் நீ பேசாம வேடிக்கை மட்டும் பார்..இன்னிக்கு இந்த ராமநாதன் யாருன்னு காட்டுறேன்...'' அவர் சொல்லிவிட்டு மாடிக்கு போக, கோதை மனதுக்குள் வானில் உள்ள அத்தனை கடவுளையும் துணைக்கு அழைத்தாள்.
(Coming)

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Where stories live. Discover now