நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-8

488 16 0
                                    

அத்தியாயம் 8

அதற்கு பின் பெரிய பெரிய தொழிலதிபர்கள் தங்கள் மகன்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பெண் கேட்க வந்தனர்.

வான் தேவதையை யாருக்கு கசக்கும்? என்று எண்ணியபடி வந்தவர்கள் ஒவ்வொருத்தரையும் நிலா தனியே அழைத்து  விஷயத்தை சொன்னதும்.... அவளை அருவருப்புடன் பார்த்த சிலர்,

"செகண்ட் டைமா நான் ஒருக்கா ட்ரை பண்ணவா? " எனக் கேட்ட சிலர்,

"அப்ப நீ புளிச்ச மில்க்கா? "
என கேட்ட சிலர்,

வந்தவர்கள் நிலாவுக்கு ஆண்கள் மீது இருந்த கொஞ்ச மதிப்பையும், நம்பிக்கையும் அறவே இல்லாமல் செய்து விட்டு போனார்கள். வெறுத்துப்போனாள்  நிலா.

பெற்றவர்களும் விடாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தருக்கு நமஸ்காரம் சொல்ல சொன்னார்கள். அவளும் இயந்திரத்தனமாக வந்து நின்று விட்டு போனாள். ஒரு எல்லை தாண்ட நிலாவுக்கு வெறுப்பே வந்துவிட்டது. அதன் பின்,

''இனிமேல் என் கல்யாணப் பேச்சை எடுக்காதீங்க! மீறி எடுத்தீங்கன்னா தற்கொலை செய்து கொள்வேன்'' என்று சொன்னதோடு நின்று விடாமல் ஒரு தடவை செய்தும் காட்டினாள்.

பெற்றவர்கள் மகள் தங்கள் முன்னால் உயிரோடு நடமாடினாலே போதும் என்று அவர்களும் அந்த பேச்சுக்கு அப்போது முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
நிலாவின் வாழ்க்கை மட்டுமல்ல அந்த வீடும் இருண்டு போனது. எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் மரக்கட்டைக்கும் இவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பார்ப்பவர்கள் சொல்லும் விதமாக மாறிப்போனாள். அதைபார்த்து பெற்றவர்கள் தினம், தினம் கண்ணீர் விட்டனர்.

அப்படி இப்படியாக ரெணடு வருடம் ஓடிப்போனது. ராமநாதனை பார்ப்பவர்கள் என்ன உங்க பொண்ணு கல்யாணமே பண்ணிக்கமாட்டேன்னு இருக்குறாளாமே? ஏன் ஏதாவது வியாதியா?'' என நேரிடையாகவே கேட்டனர். அப்படிப்பட்ட பேச்சுக்களையெல்லாம் பெரிசு படுத்தாமல் இருக்க பழகிக்கொண்டார்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Where stories live. Discover now