நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-15

450 17 0
                                    

அத்தியாயம் 15

லண்டனிலுள்ள பிரபலமான சில இடங்களுக்கு அவளை அழைத்துப்போனான். அங்குள்ள வாழ்க்கை பற்றி விளக்கம் கொடுத்தான்.

''நம்ம ஊருக்கும் இந்த ஊருக்கும் நிறைய வித்தியாசம் இல்லை. என்ன நிறைய சுதந்திரம் உண்டு. அப்பறம் நம்ம ஊரில வெயில் காய்ச்சி எடுக்கும். இங்கு குளிர்! எவ்வளவு வேணும்னாலும் குளிர் தாக்கு பிடிக்கலாம். ஸ்வெட்டர் அது இதுன்னு போட்டு..ஆனா சம்மருக்கு வெயில் வந்துட்டா எல்லாத்தையும அவிழ்த்துட்டுப் போனாலும் தாங்காது'' என்றவன், அதன் பின் பல விஷயங்களை பேசியபடி எல்லாவற்றையும் சுற்றி காண்பித்து அவளை அந்த நாட்டின் சூழலோடு ஒன்ற வைக்க முற்பட்டான்.

இடையிடையே தான் போரடிக்கிறேனா? என கேட்டு அவள் இல்லை என்று தலையாட்டியதும் தொடர்ந்தான். குளிர் மிகையால் அவள் கிளவுஸ் அணிந்திருந்த கைகளை தேய்த்துவிட்டபோது தனது கைகளுக்குள் அவளது கைகளை வைத்துவிட்டு

''ம்..இனி குளிராது'' என்றவனாக ஒரு ரெஸ்டாரென்ட்டுக்குள்ளே நுழைந்தான்.

''இது லண்டனிலே மிகப் பிரபலமான ரெஸ்டாரென்ட்..நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடணும் என்றால் இங்கே ஓடிவந்துடுவேன்..உனக்கு என்னென்ன பிடிக்குமோ தயங்காம ஆர்டர் பண்ணலாம்" என மெனு கார்டை நீட்டினான்.

நிலாவுக்கு ஒவ்வொரு இடத்திலும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியதில் கால்கள் வலித்தது! போதாது என்று ஒத்துவராத கிளைமேட்டால் தொண்டை சூடான பானம் கேட்டது.

''எனக்கு பசிக்கலை...வெறும் டீ போதும்'' என்றாள்.

''அது எப்படி? காலையில கூட ஒண்ணும் சாப்பிடலை....பசிக்கணுமே! இல்லைன்னா அல்சர் வந்துடும்மா. லைட்டா ஏதாவது சாப்பிடு'' அவனது குரலில் எதை கண்டாளோ சரி என்று தலையாட்டினாள்.

''லாரன்ஸ்...'' அவன் அழைக்க லாரன்ஸ் எனப்படும் அந்த பேரர் வந்தான்.

''சூடாக என்னென்ன வைச்சிருக்கே? அதுக்காக ஹீட்டர் வைச்சிருக்கேன்னு கடிக்காம சாப்பிட என்ன ஸ்நாக்ஸ் இருக்குன்னு சொல்லுப்பா?''

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Where stories live. Discover now