அத்தியாயம் 9
கல்யாண நாள் அடுத்த முகூர்த்தத்திலேயே குறித்து நிச்சயதார்த்தம் அக்ஷய் வராமலேயே நடைபெற்றது.
நிலாவும் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வளைய வந்தாள். அக்ஷயின் படத்தை கூட பார்க்கவில்லை. சாவித்திரி தான் மருமகள், மருமகள் என்று சொல்லி, சொல்லி மாய்ஞ்சு போனாள்.
கங்காதரன் ராமநாதன் சொன்னதில் எதையும் மனைவியிடமோ, மகனிடமோ சொல்லவில்லை. மகனிடம் புரிந்துணர்வு இருக்குறது அவனிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மனைவியிடம் எப்படி சொல்வது? அவளை பொறுத்தவரை நிலா மருமகளாக வரவேண்டும். ராமநாதனுக்கு நண்பன் என்ற முறையில் எந்த உதவியும் செய்யவில்லை, பொண்ணோட வாழ்க்கை பாழாகிவிட்டதே என அவர் விடும் கண்ணீருக்கு தன்னால முடிந்தது தன் மகனால் அவர் பெண்ணுக்கு வாழ்க்கை கிடைக்கச் செய்வது, அக்ஷயை பொறுத்தவரை கல்யாணமே வேண்டாம் என்று இருந்தவன் பெற்றவர்களின் பல வருட கெஞ்சலுக்கு பின் கட்டாயத்துக்கும் இயலாத கட்டத்தில் சம்மதம் தெரிவித்துவிட்டான்.
"நீங்க எந்த பொண்ணை கை காட்டுறீங்களோ மறு பேச்சின்றி அவ கழுத்தில் தாலி கட்ட நான் ரெடி" என்று கூறி விட்டான் இது போதாதா? உடனேயே சாவித்திரி நிலாவை பொண்டு வா! தாலி கட்டலாம் என்கிற அளவுக்கு தடபுடலாக ஏற்பாடு செய்துவிட்டாள்.
இதோ கல்யாண நாளும் வந்துவிட்டது. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்பே வருகிறேன் என்றவன் வராமல் கல்யாண முதல் நாள் வந்து இறங்கினான்.
''என்னப்பா இப்படி எங்களை டென்சன் படுத்திட்டே?'' பெரியவர்கள் கேட்க,
''என்ன பண்றது? அப்படியே போட்டுட்டு ஓடி வர்ற வேலையா நான் பார்ப்பது..? ஒவ்வொருத்தரிடமும் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வரவேண்டாமா? இருந்தாலும் வெரி வெரி சாரி...'' என புன்னகைத்தான்.
''சரிப்பா முதல்லே நல்லா ரெஸ்ட் எடு! அப்புறம் நாளைக்கு கல்யாணத்துக்கு தூங்கி வழியப்போறே..! அப்புறமா நிலாவை பார்த்து பேசிக்கோ..'' பெண்கள் இருவரும் சேர்ந்து சொல்ல,
YOU ARE READING
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...