நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா -2

686 19 0
                                    

அத்தியாயம் 2

மாலைப்பொழுதை அடித்து விரட்டிவிட்டு இருள் தனது ஆட்சியை பிடிக்க தொடங்கியது. வாசலில் காலணிகளைக் கழட்டிக்கொண்டிருந்தாள் நமது கதையின் நாயகி நிலா. பெயருக்கு ஏற்ப உருவத்தை கொடுத்த பிரம்மன் தலையெழுத்தை மட்டும் தவறாக எழுதிவிட்டிருந்தான்.

இருபத்தியாறு வயதாகும் இளமங்கை. சோஷியல் சர்வீஸ் செய்து கொண்டிருப்பவள். மகள் உள்ளே நுழைவதைப் பார்த்த கோதை கடைக்கண்ணால் கணவனிற்கு ஜாடை காட்டினாள். அவரும் கண்களாலேயே பொறு என்று ஜாடை காட்டி விட்டு பேப்பரை தூக்கினார். நிலா பாத்ரூம் சென்று முகம் கழுவி உடைமாற்றியவளாக தனது ரூமிற்குள் நுழையப்போனவளை தடுத்தது ராமநாதனின் குரல்.

''நிலா..இங்கே கொஞ்சம் வந்துட்டுப்போம்மா..'' தந்தை அழைக்க மறுபேச்சின்றி அறையை நோக்கி சென்ற கால்களை இயந்திரத்தனமாக ஹாலுக்கு திருப்பினாள்.

''ம்..இப்படி வந்து உட்காரும்மா..'' அவளது கையை பிடித்து அமர்த்தியவராய் தொண்டையை செருமினார்.

''நான் சொல்லப்போறதை பொறுமையா காது கொடுத்து கேளம்மா...இடையே குறுக்கிடாதே.. சொல்ல வர்றதை சொல்லிடுறேன்...'' என அவர் தொடங்க, நிலா சலனம் இன்றி அவரது முகத்தை பார்த்தாள். அதையே பதிலாக கொண்டு ராமநாதன் தொடர்ந்தார். கோதை பின்னால் வந்து நின்று கொண்டாள்.

''என் பிரண்டு கங்காதரன் கோயம்புத்தூரில் இருக்கான் இல்லையா? உனக்குத்தெரியும்...என் பால்ய சினேகிதன். நாங்க ஒண்ணு நினைச்சிருந்தோம். ஆனா எதுவோ நடந்துடுத்து. சரி அது போகட்டும், நான் விஷயத்துக்கு வர்றேன். அவனோட பையன் லண்டனிலே அட்வடைஸ் கம்பெனி வைச்சு நடத்திகிட்டிருக்கான். பேரு அக்ஷய். உனக்கு கூட தெரியும். மூணு வருசத்துக்கு முன்னாடி வந்துட்டு போனான். இந்த மாதம் வர்ற முதல் முகூர்த்தத்திலே உனக்கும் அவனுக்கும் கல்யாணம் இப்ப நீ போகலாம்...'' என அவர் சொல்ல நிலா எதுவோ சொல்ல உதடு திறந்தாள். அதை சைகையால் அடக்கிவராய்

''தெரியும்..! நீ என்ன சொல்லப்போறேன்னு. மீண்டும் மீண்டும் இந்தப் பேச்சை எடுக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது? மீறி பேசினா வர்றவங்களுக்கு ஃபோன் போட்டு இல்லைன்னா நேரா போய் என் விசயத்தை சொல்லிடுவேன். இல்லைன்னா இருக்கவே இருக்கு கெரசின் அது உடம்பில ஊத்திகிட்டு உங்க முன்னாடியே தற்கொலை செஞ்சுக்குவேன்..இதுதானே சொல்ல வர்றே?'' மகளை ஏறிட்டார்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Where stories live. Discover now