அத்தியாயம் 14
நிலாவுக்கு வெளியே போகவும் மனமில்லை. ஆனால் வீட்டுக்குள்ளேயும் இருந்து என்ன செய்வது என எண்ணியவளாக தயார் ஆனாள்.
''ஏன் நிலா குளிருக்கு ஜீன்ஸ் ஸ்வெட்டர் போடலாமே? எனக்கு நோ அப்ஜெக்ஷன்..புடவை கட்டிகிட்டு எப்படி...?'' என்று அக்ஷய் நிலாவைப் பார்க்க,
நிலாவோ, ''ப...பரவாயில்லை எ..எனக்கு குளிரலை.'' என்றாள் மெதுவான குரலில்.
''ஓ..நான் பக்கத்தில இருக்கும் போது எப்படி குளிர் வரும்னு சொல்றியா?'' என்றான் நமட்டு சிரிப்புடன். அவள் தலை கவிழ்ந்தாள்.
''ஏய் என்ன வெட்கமோ? கமான் டியர்'' என அவளது தோள் மேல் கை போட்டு அணைத்தவாறு வெளியேறினான்.
''என்ன, நீ ஜீன்ஸ் போட்டா ஐஸ்வர்யா ராய் மாதிரி இருப்பேன்னு சொல்ல வந்தேன்.. இட்ஸ் ஓகே! இப்போ என்ன புடவை கட்டிய ஐஸ்வர்யா ராய் இல்லையா என்ன?" அவளிடம் கேட்டுவிட்டு காரை கிளப்பினான்.
''நானும் வந்ததிலேருந்து பார்க்குறேன் நீ ரொம்பவுமே அமைதியா இருக்கே? யு நோ? எனக்கு அமைதியா இருப்பவங்களை பிடிக்காது. எப்பவும் ஜாலியா சிரிச்சுகிட்டு இருக்கணும். இல்லைன்னா ஏதாவது சளசளன்னு பேசிகிட்டு இருக்கணும். என்னை மாதிரின்னு வைச்சுக்கோயேன். ஆனா என்னமோ தெரியலை உன்னை பார்த்ததும் இந்த அமைதி, அடக்கம், நீ, எல்லாமே பிடிச்சிருக்கு. ரசிச்சுகிட்டிருக்கேன். நீ ஒவ்வொரு வார்த்தை பேசிவிட்டு தலை கவிழ்வதும், புரியாத குழந்தை மாதிரி திடும் என பார்ப்பதும்..ஐ லவ் சோ மச்'' என்றபடி பக்கத்தில் இருந்த அவளது வலது கையை எடுத்து தனது இடது கரத்துக்குள்ளே வைத்தவனாக காரை ஓட்டினான்.
''ம்....உன்னைப்பத்தி சொல்லேன்'' அவன் கேட்டதும் புரியாமல் அவள் பார்க்க அவளது அந்த பார்வையை ரசித்தவனாக-
''இதோ இப்படி பார்க்கிறியே..எங்கேருந்து கத்துகிட்டே இந்த பார்வையை?'' என்றான் எட்டி அவளது கண்களில் முத்தமிட்டவாறு.
அவள் எதுவும் பேசாது தலையைக் குனிந்து கொண்டாள்.
YOU ARE READING
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...