அத்தியாயம் 3
ஹாஸ்பிட்டலில்,
''கேசவா..எனக்கு வைத்தியம் பார்த்து போற நேரத்தில் என் கோபத்தை சம்பாதிக்காதே! போ...'' ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்ட ராமநாதன் தொண்டையை பிடித்துக்கொண்டு சொல்ல குடும்ப டாக்டர் கேசவன் காதில் வாங்காமல் தனது கடமையை செய்ய ஆரம்பித்தார்.
''கேசவா...வேண்டாம்..'' ராமநாதன் அடம்புடித்தார். கோதை கண்கள் மூடியபடி இருந்தது. அவளுக்கு ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.
''அ..அப்பா..ப்ளீஸ்பா..எனக்கு நீங்க வேணும்...திரும்பி வந்துடுங்க..'' கை கூப்பி நிலா அழ
''கேசவா! அவ கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்னு என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணச்சொல்லு...அப்புறம் நீ கொடு;க்குற டிரீட்மெண்டை ஏத்துக்குறேன்.. இல்லைன்னா விடு இப்படியே கொஞ்சம் கொஞ்சமா செத்துடுறேன்...'' அவர் நெஞ்சை பிடிக்க நிலா பதறியவளாய் அவரது தலையில் சட்டென்று கையை வைத்து,
''ச...சத்தியம்பா..உங்க மேல சத்தியம்.. சம்மதிக்கிறேன்...நீங்;க எது சொன்னாலும் கேட்டுக்குறேன்..ப்ளீஸ்பா...'' அழுதவாறு மடங்கி உட்கார்ந்துவிட்டாள். ராமநாதன் நிம்மதி பெருமூச்சோடு டாக்டருக்கு கை அசைத்தார். நர்ஸ் நிலாவை அறையை விட்டு வெளியே கொண்டு வந்து அமர்த்திவிட்டு போனாள்.
உள்ளே டாக்டர் கேசவன் நண்பனை பார்த்து,''வெறும் டானிக்கை குடிச்சுட்டு நிஜமாக விஷம் குடிச்சவங்களாட்டம் என்னமா புருஷனும் பொண்டாட்டியும் ஆக்ட் பண்றீங்க..அங்கே பாரு உன் பொண்டாட்டி கண்ணை திறக்கவேயில்லை.. சத்தத்தையே காணோம்...ஒரு ஒண்ணவர் ரெண்டு பேரும் நல்லா தூங்குங்க..அதுக்கப்புறம் நிலாகிட்டே ஓகே உன் பேரண்ட்ஸ் பொழைச்சுட்டாங்கன்னு சொல்லிடுறேன்..'' அவர் சொல்ல ராமநாதன் முறைப்புடன் தலையாட்டினார்.
நிலாவோ பெற்றவர்கள் உயிருக்கு போரடிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற நினைப்பில் எல்லாவற்றையும் நினைத்து நினைத்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி கொண்டிருந்தாள்.
ESTÁS LEYENDO
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...