நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-34

383 13 0
                                    

அத்தியாயம் 34

அடுத்த பிளைட்டில் இந்தியா திரும்பினார்கள். கோதை செய்தி அறிந்ததும் மகளை கட்டிக்கொண்டு கதறினாள்.

''பாவி மகன்..! இப்படியா உன் வாழ்க்கையை பாழாக்குவான்...? நல்லா இருப்பானா? நாசமாக போகணும்...'' எவ்வளவுக்கு சபிக்க முடியுமோ அவ்வளவுக்கு அக்ஷயை சபித்துக்கொட்டினாள். நிலா முகம் மாறியவளாய்,

''அ..அம்மா..ப்ளீஸ்..'' எனறாள் கண்ணீரோடு. தான் சொன்ன பொய்களால் அவர்கள் அக்ஷயை சபிப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிஜமாக அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்தாள். மகளது முகம் பேயறைந்தது போல இருக்க ராமநாதன் மனைவியை பார்வையால் அடக்கினார். "இதோடு இந்த பேச்சை விடு" என்றார். ஆரத்தி எடுத்து வந்து திருஷ்டி கழித்தாள் கோதை.

''உன்னை பிடிச்ச துன்பம் எல்லாம் இத்தோடு விலகட்டும்'' என பூசணிக்காயை போட்டு உடைத்தாள். பேரப்பிள்ளைகளை வாங்கிக் கொண்டாள்.

''அடி என் ராஜாத்தி..என்னமாய் இருக்காங்க....'' என்றாள் கோதை.

''அச்சு அசல் அத்தான் போல... இல்லைம்மா?'' பூஜா ஆவலாக கேட்டாள்.

''அத்தானா? யாரடி அத்தான்? இனி அந்த கேடுகெட்ட பயல் பேர் வாயிலியே வரக்கூடாது.'' கோதை கோபமாக மகள் இருப்பதை மறந்து சொல்ல, நிலா முகம் இருண்டது.

''கோதை! நீ மட்டும் மாத்தி மாத்திக் கொஞ்சிகிட்ருக்கே..ஒண்ணை என்கிட்டே தாம்மா..'' என பேச்சை மாற்றினார் ராமநாதன்.
குழந்தைகளோடு பெற்றவர்களும் குழந்தையாக மாறிப்போனதைப் பார்த்தாள் நிலா.

நாட்கள் வேகமாக ஓடிப்போனது. நிலா எப்போதும் முழங்காலிட்டு முகத்தை அதற்குள் புதைத்தவாறு யோசனையிலேயே இருந்தாள். அவள் மனம் முழுதும்     அக்ஷயை சுத்தியே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவனை பார்க்க வேண்டும் போல் மனது சொன்னது. அவன் கூட சேர்ந்து வாழ முடியாமல் போனதை நினைத்து ஏக்கம் எழுந்தது. அவனை மறந்து இருக்கலாம் என நினைத்து இருந்தவள் மாறாகக் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் அது முடியாத காரியம் என தோன்றியது. தன்னையும் அறியாமல் அவன் தனக்குள் எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறான் என எண்ணினாள். தனக்கு மட்டும் வாழ்க்கை தடம் புரளாமல் இருந்திருந்தால் இன்று அவளது கணவனோடு எப்படி வாழ்ந்திருப்பாள் என யோசித்தாள். எவ்வளவு தான் முயன்றும் அவளால் அவனது நினைவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Opowieści tętniące życiem. Odkryj je teraz