நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-29

346 13 0
                                    

அத்தியாயம் 29

ஒவ்வொரு டிராவல் ஏஜென்சியிடம் கேட்டபோது முதலில் அவர்களை விசித்திரமாக பார்த்தனர்.

''கோவிச்சுங்காதீங்க சார்...இவரோட சிஸ்டர் கோவிச்சுட்டு போயிட்டா தேடிகிட்டிருக்கான் அதான். இந்தியா போயிருக்கணும்..உங்ககிட்டே டிக்கெட் புக் செய்தாங்களா?'' என அக்ஷய் அறுபதாவது பொய்யை எடுத்து விட்டான்.

முதலில் மறுத்தவர்கள் அவர்களது டீசன்டான உருவத்தையும் கெஞ்சலையும் பார்த்து சிலர் சொன்ன நிலாவோடு இவர்களது நிலா ஒத்து வரவில்லை. கணவனோடு சென்றிருந்தாள் ஒரு நிலா. குடும்பத்துடன் சென்றிருந்தாள் ஒருத்தி. உதட்டை பிதுக்கியபடி வெளியே வந்தனர்.

''ஏண்டா...பாதி டிராவல் ஏஜென்சி இங்கே..சீஃப்பா கிடைக்கும் என்பதால டிக்கெட்டை ஒருவேளை மத்தைய ஐரோப்பா நாட்டில புக்கிங் பண்ணியிருந்தால்..''

''ச்சே...நிலா வந்தே ஒரு வாரம் தான். அதுக்குள்ளே இந்த விவகாரம் எல்லாம் தெரிஞ்சுக்க வாய்ப்பில்லைனு நான் நினைக்கிறேன். இந்த ரூட்டை விட்டுட்டு வேற ரூட்டில யோசிப்போம். அதுக்கு முன்னாடி நமக்கு புதிர் போட்ட போலீஸ் மேட்டர பத்தி தெரிஞ்சுக்கணும்...''

''ம்..அதை அவங்க கன்பஃர்ம் பண்ணிட்டு சொல்றேன்னு சொன்னாங்க..''

''சாரிடா கீர்த்தி....! என்னால உனக்குத்தான் ரொம்ப சிரமம்...வெரி சாரி....நீயும் இல்லைன்னா இந்நேரம் என்னோட பொணம் இந்தியாவுக்கு பிளைட்டில பறந்து போய் அடக்கம் ஆகியிருக்கும்.'' நொந்து போய் சென்னவனிடம்,

''ச்சேச்சே...! உன்னால சிரமம் இல்லைடா. எல்லாம் ஒரு படிப்புத்தான்.'' ஒரு பெருமூச்சுடன் அவனைப் பார்த்தான்.

''என்னடா சொல்றே?''

''பின்னே... கல்யாணமே வேண்டாமுன்னு தோணுது.'' விரக்தியுடன் கூறினான் கீர்த்தி.

''எல்லோருக்கும் என்னைப்போலவா அமையும்? கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி கம்பெனில எல்லா வேலையையும் ஒழுங்கா பார்த்தேன்? இப்போ எதிலும் கவனம் செலுத்த முடியலை. இந்தளவுக்கு எதுவும் என்னை ஆட்டுவித்தது இல்லை..கல்யாணமே வேண்டாம் என்று சொன்னேன் கேட்டார்களா? கடைசி காலத்திலே துணையாக ஒருத்தி வேணும்னு கட்டி வைச்சாங்க. அவ பாதியிலேயே அறுத்துகிட்டு போயிட்டா...''

''..........''

''நல்லா அமைஞ்சுட்டா அதைவிட சொர்க்கம் வேறு எதுவும் இல்லை....ஆனா தலைகீழான இதோ என்னைப்போல நரக வேதனைதான். நான் சாகாமல் நரகத்துக்கு போகாமல் அந்த வேதனையை அனுபவிச்சுகிட்டிருக்கேன்.''

''என்னதான் இருந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் மனசை தளரவிடாதே.'' கீர்த்தி அவனுக்கு ஆறுதல் சொல்லியபடி காரை விட்டு இறங்கினான்.

காரை தன்வீட்டுக்கு திருப்பியவனின் செல் அலறியது. கீர்த்தியின் எண்கள் டிஸ்பிளே ஆயின.

''என்னடா? ஏதாவது மறந்துட்டியா?''

''நான் இல்லை நீதான் மறந்துட்ட.''

''எதை?''

''நாளைக்கு ஒரு ஃபங்ஷன் இருக்கு ஞாபகப்படுத்தி பாரு.''

''என்ன ஃபங்ஷன்? எனக்கு மூளை வேலை செய்யலைடா. நீயே சொல்லிடு.''

''என்னடா இது? வருஷா வருஷம் சிறந்த விளம்பரக்கம்பெனிக்கு தரப்படும் விருது வழங்கும் விழாடா...! நம்ம கம்பெனிக்குத்தான் வழக்கம்போலே கிடைச்சிருக்கு. தொடர்ந்து பத்து வருசமா நாமதானே வாங்குறோம்...நாளைக்கு நாலு மணிக்கு ஒறேயால் கம்பெனியில்..இப்போ ஞாபகம் வந்துடுத்தா?''

''சிட்...எப்படி மறந்துபோனேன்னு பாரு...தாங்ஸ்டா.''

''இட்ஸ் ஓகே...நாளைக்கு கம்பெனி வேலையை முடிச்சுடுட்டு போயிடலாம்..ஹாஃப் டே லீவு கொடுத்துடலாம்..''

''ஓகே...பை...'' என செல்லை அணைத்தான்.
ஒவ்வொரு வருஷமும் அந்த விருதை வாங்கும் போது அவன் உழைப்புக்கு கடவுள் தரும் பரிசு என மகிழ்ந்து போவான். உலகத்திலே எதையோ சாதித்துவிட்டதை போல ஒரு உணர்வு எழும். எல்லா போட்டி நிறுவனங்களும் பொறாமையில் எரிந்து கொண்டிருக்க கம்பீரமாக போய் வாங்கிவருவான் அந்த விருதை. அந்த உற்சாகம், ஆர்வம், சந்தோஷம் இப்போது மிஸ்சிங், நிலா விஷயத்தால்.

அவள் மட்டும் இருந்திருந்தால்
''பார் நான் சம்பாதிச்சிருக்கும் பெயரையும் புகழையும்'' என அவளுக்கு காட்டி இன்னும் சந்தோஷப்பட்டிருப்பான். நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறு நினைப்பது வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள். இல்லை என்றால் ஏது சுவராசியம் வாழ்வதற்கு?
(Coming)

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Where stories live. Discover now