அத்தியாயம் 24
''இந்தா..'' என்றாள் நிலா எதிரே இருந்த நீரஜாவிடம்.
''என்னடி?''
''பிரிச்சுப்பாரேன்'' அவள் சொல்ல. தோழி தந்த கவரை பிரித்துப் பார்த்தாள். அதில் நிலாவின் முதல் மாதச் சம்பளம் இருந்தது.
''என்னடி இது? சம்பளத்தை என்கிட்டே தர்றே?''
''ஆமா..வீட்டு வாடகை, சாப்பாட்டுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மிச்சத்தை நீ என்னவேணா பண்ணிக்கோ! உன் இஷ்டம்'' என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த வார இதழை எடுத்து விரித்தாள். நீரஜா வியப்போடு தோழிக்கு அருகே வந்தமர்ந்தாள்.
''நிலா! விளையாடாதே! என்னோட சம்பளம் போதும் வாடகைக்கும், சாப்பாட்டுக்கும். உன்னோடதை நீதான் வைச்சுக்கணும் அவள் கொடுத்த கவரைத்திருப்பிக் கொடுத்தபடி கூறினாள்.
''ம்ஹூம்...! எனக்கு தேவை இல்லை! உன்னோடது போதும் என்றால் இது உன் பேங்கில், உன் கால்யாணத்துக்கு என்னோட பரிசாக போட்டுக் கொண்டு வா'' என்றாள் வார இதழை விட்டு பார்வையை எடுக்காமல். நீரஜா நெகிழ்ந்து போனவளாக,
''நி...நிலா...எப்பவோ நடக்கப்போகும் என் கல்யாணத்தை பத்தி சிந்திக்குறே..! நடந்து முடிந்த உன் கல்யாண வாழ்க்கையை பத்தி, உன்னைப்பத்தி நினைச்சு பாரு.''
''என்னை பத்தி நினைக்க என்ன இருக்கு?'' என்றபடி மீண்டும் அந்த வார இதழிலேயே ஆழ்ந்தாள்.
''உன்னோட வாழ்க்கை எப்படி...?''
''அதைப்பத்தி பேசமாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கே'' என்றாள் அடுத்த பக்கத்தை புரட்டியவாறே.
''சரி..அப்படீன்னா இதுக்கு முடிவு?''
''முடிவு? ம்...இதபார் நான் வாழ்ந்து முடிச்சுட்டேன். இனி புதுசா எதுவும் இல்லை வாழ்க்கையில நான் பார்க்குறதுக்கு..! என்னால உனக்கு ஏதும் பிரயோசனமாக இருக்கணும். உன்னோட சுமையில பங்கு ஏற்கிறேன்னு தான் நான் இங்கே வந்ததே அவ்வளவு தான்.''
''நிலா ஏற்கனவே உன்கிட்டே நிறைய கடன் பட்டிருக்கேன் இனியுமா? எப்படி? எப்படித் திருப்பிக்கொடுக்குறது?''
YOU ARE READING
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...