அத்தியாயம் 26
அக்ஷய் வீட்டில்...
கீர்த்திவாசன் ஃபாஸ்ட்புட் கடையில் பார்சல் கட்டிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு போனான். டெலிஃபோன் ஒலிக்க அவன்தான் எடுக்கிறானோ என்று ஒலிவாங்கியை காதில் பொருத்தினான் அக்ஷய். கேட்டது மாமனாரின் குரல்
''மாப்பிளை நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு நீங்க ஃபோண் பண்ணி. அதான் ஒரு கால் போட்டேன். சௌக்கியமா இருக்கீங்களா?''. மாமனார் கேட்க அக்ஷய் அடைத்துப்போன தொண்டையை செருமியபடி,
''ம்...ந...நல்லா இருக்கோம்."
''என்ன மாப்பிளை குரல் ஒரு மாதிரியாக இருக்கு ரொம்ப குளிரா?'' அவரே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல,
''ம்.'' கொட்டினான்.
''நிலா..என்ன பண்றாள்? கிளைமேட் ஒத்துக்கொண்டுச்சா? லண்டன் பிடிச்சிருக்காமா?'' அவர் மகளை பற்றி கேட்டதும் அக்ஷயை பதட்டம் தொற்றிக் கொண்டது சட்டென்று.
''ஆமாம் மாமா! அவளுக்கு என்ன... லண்டன் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிகிட்டிருக்கா.''
''கொஞ்சம் கூப்பிடுங்க. கோதை பேசணுமுன்னு சொல்லிகிட்டிருக்கா.''
''அவ இங்கு இல்லே மாமா'' என்றான் சட்டென்று.
''இல்லையா?''
''ஆமா மாமா! வீடடில இருக்க போரடிக்கும் என்று பக்கத்தில இருக்குற லைப்ரரி வரைக்கும் போவா...இல்லைன்னா குழந்தைங்க கிரஸ் இருக்கு அங்கே போய் இருப்பா.'' என்றான். சந்தர்ப்பம் சூழ்நிலை எப்படியெல்லாம் சட்டென்று பொய் பேச வைக்குது என யோசித்தவனாக.
''நீங்க ஃபோன் பண்ணாதீங்க மாமா! நானே ஃபோன் பண்றேன்..நிலாகிட்டே ஏதாவது சொல்லனுமா?''
''இல்லைப்பா...! ஆண்டவன் புண்ணியத்தில அவளுக்கு நீ கிடைச்சிருக்கே.. அவளைப்பத்தி எங்களுக்கு கவலை இல்லை! நீங்க சந்தோஷமா இருந்தாப் போதும்..! நான் வைச்சுடுறேன்..'' அவர் வைக்க அக்ஷய் அந்தக் குளிரிலும் வழிந்த வியர்வையை துடைக்க கூடத்தோன்றாமல் சோபாவில் சாய்ந்தான்.
தலைக்குள்ளே யாரோ சம்மட்டியால் அடிததுக்கொண்டிருப்பது போன்ற வலி. காபி குடிச்சா என்னவென்று தோன்றியது. நிலா போனதும் வேலைக்காரியை நிறுத்திவிட்டான். நிம்மதியாக ஒரு வேளை காபி குடிச்சது இல்லை! இப்போது வேணும் போல் இருக்க, எழுந்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக பிரோவை திறந்தான்.
''தன்னோடதை எல்லாத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு எடுத்துட்டு போயிட்டா பாவி..! ஒரு குட்டி டயறி வைத்திருப்பாளே அது கூட இங்கு தானே இருந்தது'' என எல்லா டிராயரையும் திறந்து பார்த்தான்.
''பச்...கல்யாணம் பண்ணதை தவிர வேறு என்னடா அவளைப்பத்தி உனக்கு தெரியும். மாங்கா மடையன்டா'' தன்னைத்தானே திட்டினான்.
''அவ டேஸ்ட், வெறுப்பு, விருப்பு, பிரண்ட்ஸ் ம்ஹூம்..ஒரு இழவும் தெரியாது. தெரிந்தது எல்லாம் ஒண்ணே ஒண்ணுதான் அவ ரொம்ப அழகு, அதிலும் அடக்கம்! வள வளன்னு பேசுறவங்களை நம்பலாம், ஆனா இந்த சைலண்டா இருந்துகிட்டு பின்னாடி கொல்றவங்களை நம்பவே கூடாதுடா சாமி! நல்ல பாடம் கத்துகிட்டேன். அடக்கமான பொண்ணுன்னு சொன்னீங்க சரி..! அந்த அடக்கத்துக்குள்ளே என்ன இருக்குதுன்னு விசாரிச்சு பார்த்தீங்களா?'' பெற்றவர்களை குறைபட்டான்.
ஒவ்வொரு பொழுதும் விடியும் போது இன்று உங்க மனைவியை கண்டுபிடித்துவிட்டோம் என ஒரு ஃபோலீஸ் ஆபீசர் இல்லை வேறு யாராவதோ தன் வீட்டு காலிங் ஃபெல்லை அழுத்தமாட்டார்களா? என ஏக்கமும் தவிப்புமாக நாட்களை கடத்திக் கொண்டிருந்தான். அவனது மனமும், செயலும், சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து கொண்டிருந்தன.
எதிரே யார் இருந்தாலும் அவர்கள் கண்ணுக்கு தென்படுவதில்லை. யார் கேள்வி கேட்டாலும் காதில் விழுவதாக தெரியவில்லை. அப்படி விழுந்தால் எரிந்து விழத்தோன்றியது. இல்லை என்றால் அவர்களை ஓங்கி அறைந்தால் என்ன என்று தோன்றியது.
தனக்கு என்ன நேர்கிறது? கொஞ்சம், கொஞ்சமாக பைத்தியமாக மாறுகிறேனோ? என கண்ணாடியில் ஒவ்வொரு தடவையும் கேட்டான். ஒழுங்காக சாப்பிடுவது இல்லை! தூக்கம்? அது வந்தால் தானே தூங்குவதற்கு?, ஓழுங்காக ஆடை அணிவதில்லை! குளிரில் உடம்புக்கு வந்து அவஸ்தைபட்டாலும் அது உறைக்கவில்லை.! எப்போ பார்த்தாலும் தனக்குள் முனங்கிகிட்டிருப்பவன் இப்போது வாய்விட்டு முனங்கத் தொடங்கினான். தனக்கு மட்டும் ஏன் இப்படி? தெரியாமல் ஏதாவது பாவம் செய்து விட்டேனோ? என அவனுக்கு அவன் மேலேயே சந்தேகம் வரத்தொடங்கியது.
(Coming)
VOCÊ ESTÁ LENDO
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...