நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-13

441 16 0
                                    

அத்தியாயம் 13

வழக்கமாக அக்ஷய் சீக்கிரமாகவே எழுந்திருப்பான். இன்று மட்டும் குளிருக்கு இன்னும் தூங்க வேண்டும் போலிருக்க நன்றாக போர்வையை இழுத்து போர்த்தியபடி படுத்திருந்தான்.

நிலா படுத்தது எப்படியோ அப்படியே எழுந்தாள்.
தூங்காமலேயே பெட்டில் நைட் முழுதும் விழித்திருந்து காலையில் அப்படியே எழுந்து வருவது அவளாகத்தான் இருக்கும். சத்தம்போடாமல் தனது கடமையை முடித்துவிட்டு பால்கனியில் ஜன்னல் வழியாக மெல்ல எட்டிப்பார்த்தாள்.

பின் ஜன்னல் ஸ்கிறீனை இழுத்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள். அப்படியே சோபாவில் தலையை பின்னுக்கு சாய வைத்து கண்களை மூடினாள். எத்தனை மணி நேரம் இருந்தாளோ தெரியாது அக்ஷய் குரல் கேட்டது.

''தூக்கம் கலையாமல் எதுக்கு எழுந்திரிச்சே?'' என்றவனை பார்த்தாள். அப்பதான் டெலிஃபோன் மணி ஒலித்துத்தான் அவன் எழுந்து வந்து ரிசீவரை எடுத்தது உறைத்தது.

''ஹலோ மாப்பிளை நான் இந்தியாவில் இருந்து மாமா பேசுறேன்.'' ராமநாதனின் குரல் உற்சாகத்துடன் கேட்டது.

''ஹலோ மாமா...சொல்லுங்க நாந்தான் அக்ஷய்தான் பேசுறேன்.'' புன்னகையுடன் கூறினான்.

''ரொம்ப நேரமா அடிச்சுட்டிருந்திச்சு ஒரு வேளை நீங்க இல்லையோன்னு நினைச்சுட்டேன்.''

''ஓ..ஸாரி மாமா..தூங்கிட்டேன். ஃபோன் சத்தம் கேட்கலை.''

''எப்படி இருக்கீங்க? என் பொண்ணு நிலா எப்படி இருக்கா?''

''நாங்க நல்லா இருக்கோம் மாமா! நிலாகிட்டே தர்றேன் அவகிட்டே பேசுங்க'' என ரிசீவரின் வாயை பொத்தியபடி மனைவியை அழைத்தான்.

''உன் அப்பா'' என்று அவளிடம் ரிசீவரைக் கொடுத்தான்.

''நீ பேசு நான் முகம் வாஷ் பண்ணிட்டு வர்றேன்'' என்றவனாக அவளது கன்னத்தில் ஒரு இச் பதித்துவிட்டு பாத்ரூமுக்குள் ஓடினான்.

நிலா சலனம் இன்றி ரிசீவரை காதுக்கு கொடுத்தாள்.

''நிலா எப்படிடா இருக்கே?'' தந்தை குரல் கேட்க

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Where stories live. Discover now