அத்தியாயம் 16
இந்தியாவில்...
''என்னங்க காலையிலேயே பலத்த யோசனை? கணவனிடம் கோதை ஃபைல்களை நீட்டியவாறு கேட்டாள்.
''ஒண்ணுமில்லை நிலாவை நினைச்சேன்.''
''அவளுக்கு என்னங்க? எத்தனை இடம் தேடி இருப்போம்...இங்கு இருக்கும் பையன்கள் இன்னும் முன்னேறலை! சும்மா வாய் பேச்சுக்கு இருபத்தியோராம் நூற்றாண்டு பிள்ளைங்க என்று பேசுவானுங்க. எவனுக்கும் நல்லெண்ணம் கிடையாது. நாம என்னடான்னா கையில வெண்ணெயை வைச்சுண்டு ஊர் ஊரா அலைஞ்சுண்டிருந்தோம்..''''ஏன்மா கொஞ்சம் பழமொழியை மாத்தக்கூடாதா? எத்தனை வருசத்துக்கு கையிலேயே வெண்ணெயை வைச்சுண்டு அலைஞ்சுண்டிருப்பே?'' பூஜா தாயை கிண்டல் செய்தபடி டிபன் ஃபாக்சை தேடினாள்.
''சும்மா இருடி!'' கோதை அவளை முறைத்தாள்.
''இல்லே கோதை இன்னார்க்கு இன்னார்ன்னு சும்மாவா சொன்னாங்க?'' ராமநாதன் கூற,
''அப்படி சொல்லுங்கப்பா..நிலா கூட அக்ஷய் அத்தனை பார்த்துட்டு மனம் மாறி இருப்பாள்னு நினைச்சேன்.''
''நீ நினைக்க வேண்டாம். உன்னைப்போல இல்லை அவ.''
''வந்துடுவியே. உன் பொண்ணை ஒண்ணும் சொல்லக்கூடாது'' சின்னவள் முணு முணுத்தபடி காலேஜ் கிளம்பினாள்.
லண்டன்..
வீட்டு காலிங் பெல் அலறியது.''ச்சே..யார்டா அவன்? காலங்காத்தாலே காதை செவிடாக்குறது'' அக்ஷய் பிரட் ஒரு கையிலும் ஜாம் மறுகையிலும் வைச்சிருந்தவன் கதவை திறக்க எத்தனிக்க, நிலா அவனை சைகையால் "இருங்க" என்றுவிட்டு தான் எழுந்து போனாள்.
''கதவு லென்ஸ் வழியா கவனமா யாருன்னு பாரும்மா.. வெள்ளைக்காரன்னா நான் வர்றேன்'' என்றான். இவனது குரல் கேட்டு வெளியே இருந்தவன்,
''டேய் அக்ஷய் நாந்தான்டா கீர்த்தி.''
''அட கீர்த்தியா? திறந்துவிடு நிலா'' என்றபடி வெட்டிய பிரட் துண்டை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்தான்.
YOU ARE READING
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...