நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-7

508 16 0
                                    

அத்தியாயம் 7

''நிலா வந்ததும் அவ முகத்தை கவனிச்சீங்களா?'' கோதை ராமநாதனிடம் கேட்டாள்.

''ஆமா என்னவோ போலிருக்கா..ரெண்டு நாளா நானும் பார்க்குறேன்" என்றார் அவர்.

''டொனேசன், கினேசன் சரியா கிடைக்கலையோ?'' பூஜா தாயை கேள்வியுடன் நோக்கினாள்.

''நீ சும்மா இருடி...! டொனேசன் பத்தலைன்னா உங்கப்பாகிட்டேயிருந்து ஒரு செக்கை கிழிச்சுட்டு, போய் கொடுத்துட்டு வந்து தான் மறு வேலை பார்ப்பாள்..''

''அப்போ டிராவல் செய்த டயர்டா இருக்கும் விடு...'' ராமநாதன் யதார்த்தமாகச் சொன்னார். இவர்களது பேச்சை காதில் வாங்கியவளாக நிலா வந்தாள்.

''வாம்மா..போன காரியம் எப்படி இருந்திச்சு?'' தந்தை கேட்க,

''டாடி..நான் உங்ககிட்டே ஒண்ணு சொல்லப்போறேன்.. அதிர்ச்சியடையாமல் எனக்கு பக்க பலாமாக நின்று ஹெல்ப் பண்ணணும்'' என்றாள் தந்தையை பார்த்து.

''உனக்கு பக்கபலமா நிக்காமா வேறு யாருக்கம்மா நிக்க போறேன்? என்னென்னு விஷயத்தை சொல்லு'' ராமநாதன் இப்படி சொன்னதும், நிலா கண்களை மூடியடி நடந்ததை சுருக்கமாக சொல்லிவிட்டு கண்களை திறந்தாள். மூவரது முகங்களும் அதிர்ச்சி சுத்தமாக தாக்கியிருந்தது.

''அடி மீனாட்சி! இப்படி ஒரு கல்லை தூக்கி என் நெஞ்சில போட்டுட்டியேடி..'' கோதை தான் வணங்கும் மீனாட்சி அம்மனை பழிக்கு அழைத்தாள். ராமநாதன் கொதித்து போனார்.

''புறப்படு...! இப்பவே கமிஷனர் ஆபீசுக்கு உன்னை அழைச்சுட்டு போறேன்...என் பொண்ணை நாசமாக்கினவங்களை இந்த ஜென்மத்துக்கு வெளியே வராமல் பண்ணிடுறேன்...கிளம்பு'' ராமநாதன் ஆவேசமாக சொல்ல ,

''தேங்க்ஸ்பா...! எங்கே நீங்களும் மத்தவங்க மாதிரி மூடி மறைச்சுடலாம்னு சொல்வீங்களோன்னு பயந்துகிட்டிருந்தேன்.'' கண்கள் கலங்க தந்தையின் கரங்களை பற்றினாள்.

''நில்லுங்க...!'' அதிரடியாக கோதையின் குரல். இருவரும் திரும்பி பார்த்தனர். அவிழ்ந்த கூந்தலை மங்கம்மா சபதம் எடுத்த போது அள்ளி முடிந்தது போல முடிந்தவளாய்,

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Where stories live. Discover now