நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-23

355 13 0
                                    

அத்தியாயம் 23

ஒரு மூன்று மணி நேரம் டிரைவிங்கின் பின் அந்த சர்ச்சை அடைந்தார்கள்.

கிறிஸ்மஸ் வரப்போகிறது என்பதை அதன் முகப்பும் வெளியே நின்ற மரங்களும் பறை சாற்றிக்கொண்டிருந்தன. பனி என்றும் இல்லாதவாறு கொட்டோ கொட்டு என கொட்டிக் கொண்டிருந்தது. முழங்கால் புதையும் அளவுக்கு பனி நிறைந்து போய்க் காணப்பட்டது.

அக்ஷய் பார்க்கிங் பண்ண இடம் இல்லாத காரணத்தால், பார்க்கிங்க்குக்கு கட்டணம் செலுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு சில நாணயங்களை போட்டு டிக்கெட் எடுத்து காருக்குள்ளே வைத்தான்.

உள்ளே பலதரப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருத்தரும் பிரார்த்தனையில் இருந்தனர். பாதிரியாரின் அருகில் வந்து முழங்காலிட்டு அமர்ந்தான்.

''வணக்கம் ஃபாதர். கொஞ்ச நாளைக்கு முன்பு புதுசா இந்தியர்கள் யாராவது இந்த சர்ச்சில் அடைக்கலம் தேடி வந்தாங்களா?''

''இந்தியர்களா? இல்லை மை சன்..''

''இல்லை ஃபாதர்..ஒரு பெண்..அவங்களை பார்த்தா இந்தியன் போலத் தோற்றம் அளிக்காது. ஆனா அணிந்திருந்த ஆடைகள் வைத்து'' கீர்த்தி
அவசரமாகச் சொன்னான்.

''சாரி மை சன்..! அப்படி யாரும் வரவில்லை...எதுக்கும் பக்கத்தில் உள்ள விடுதிக்கு போய் பாருங்க. அங்கு தான் எல்லோரும் கூடி இருப்பார்கள்...காட் பிளஷ் யூ..'' என வாழ்த்த, ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வெளியேறினார்கள்.

விடுதியில் விசாரித்தும் இல்லை என்றதும், அக்ஷய் ஏமாற்றத்தோடு காருக்குள்ளே நுழைந்தான். கைகள் ஸ்டியரிங்கை இறுக்க, முகம் யோசனையில் இருந்தது.

''விடு..! வேற வழி பார்க்கலாம்." என்றான் கீர்த்தி, தான் சொல்லும் சமாதானம் நண்பனை சாந்தப்படுத்தாது என்று தெரிந்தும்.

கார் தன்பாட்டுக்கு போய்க் கொண்டிருக்க, காரினுள் கனத்த மௌனம் நிலவியது. அக்ஷய் கார் ஓட்டியபடி வெளியே பார்வையை எறிந்தான்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Donde viven las historias. Descúbrelo ahora