அத்தியாயம் 35
''ஹலோ...'' என்றாள் கோதை.
''அ..அத்தை நா..நான் அக்ஷய் பேசுறேன்.'' என்றான் உலர்ந்து போன தொண்டையை ஈரமாக்கி. அவனது பெயரைக்கேட்டதுமே கோதை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. படக்கென்று ஃபோனை வைத்தாள்.
''ஹலோ..ஹலோ...'' கத்தினான்.
''மெதுவாப்பா..! வயித்துல போட்ட தையல் இன்னும் ஆறலை! கத்தாதே! என்னாச்சு..?'' கீர்த்தி கவலையுடன் கேட்டான்.
''லைன் கட்டாயிடுத்து..'' இவன் சொல்ல ",
அதே நேரம் இந்தியாவில்
''என்ன கோதை யாரு ஃபோனில்...?'' ராமநாதன் பத்திரிகையை விரித்தவாறு கேட்டார்''வேற யாரு..உங்க உத்தம மாப்பிளை பேசுறாராம்...'' அவள் சொல்ல ராமநாதன் துள்ளியபடி எழுந்தார்.
''யாரு அந்த ராஸ்கலா? ஏன் வைச்சே? என்கிட்டே தந்திருக்க வேணாம்? கிழிச்சிருப்பேன்...'' ராமநாதன் பத்திரிகையை எறிந்துவிட்டு கோபமாகப் புலிபோல அங்கும் இங்கும் நடைபோட்டார்.
''இதபாருங்க...அவன்கிட்டே நமக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? நல்லவன் மாதிரி நம்ப வைச்சு நம்ம பொண்ணை கொடுமைப்படுத்தியவன்..நிலா இங்குதான் இருக்குறாள்னு சொல்லி வைச்சிடாதீங்க..! அவன் என்ன சொல்லவர்றான்னு கேளுங்க..! அப்புறமா அதுக்கு தகுந்தபடி பேசுங்க..'' கோதை சொல்ல ராமநாதன் சிந்தித்தவராக,
''ம்..பார்க்கலாம்...'' எனப் பல்லை கடித்தார். மறுபடியும் ஃபோன் ஒலித்தது.
''ஹலோ யாரு பேசுறது?'' ராமநாதன் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி கேட்டார்.
''மா...மா.....நா...நாந்தான் அக்ஷய் பேசுறேன்..எப்படி இருக்கீங்க?'' என்றது மறுமுனை. ராமநாதன் ரிசீவர் வாயைப் பொத்தியபடி மனைவியிடம் திரும்பினார்.
''என்னை சுகம் கேட்குறான்டி...என்ன கொழுப்புன்னு பாரு.'' என்றவர் மைக்கைப் போட்டார்.
''ம்..நான் நல்லா இருக்கேன்..'' குரலில் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் பதில் சொன்னார்.
YOU ARE READING
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...