அத்தியாயம் 20
விமானம் மலேசியா வந்து சேர்ந்தது. மலேசியாவில் இறங்கிய நிலா தனது கையில் இருந்த டிக்கெட்டை பார்த்தாள்.
. ''இனி நான் விரும்பினால் இந்தியா போக டிக்கெட் எடுக்கலாம்.."
இந்தியா போவதா? வேண்டாமா? என ஒரு போராட்டமே நடந்தது அவளுக்குள்.
''இந்தியா போய் மறுபடியும் தாய் தந்தையை நடைப்பிணமாக்கி பார்க்கும் மனது இல்லை. அவர்கள் நினைப்பது போல அவர் மகள் லண்டனிலே சந்தோஷமாக வாழ்கிறாள் என எண்ணிக்கொண்டிருக்கட்டும், இல்லை என்றால் என் கூட அக்ஷயை சேர்த்து வைத்து அவனது வாழ்க்கையை மேலும் பாழாக்குவார்கள். என்னால் அவன் கூட வாழ முடியாது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு வாழப்பழகிக்கொள்ள முடியவில்லை'' அவளது மனம் செக்கு மாடு போல நடந்ததையே திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டிருந்தது.
தன் கூட படித்த தோழிகள் சிலர் மலேசியாவில் இருப்பது தெரியும். தனது டயரியை புரட்டினாள். சிலருக்கு கல்யாணம் ஆகியிருந்தது. மற்றவர்களில் ஒருத்திக்கு ஃபோன் போட்டாள். மறுமுனையில் ரிசீவர் எடுப்பது தெரிந்தது.
''ஹலோ'' எனறாள் நிலா.
''ஹலோ யார் பேசுறது'' என்றது மறுமுனை மலாய் மொழியில்.
''நீரஜா..நான் நிலா பேசுறேன்'' என்றாள் ஆங்கிலத்தில்.
''வாட்..நி..நிலா! எங்கேருந்துடி பேசுறே?'' என துள்ளலுடன் தமிழுக்கு தாவினாள் நீரஜா.
''மலேசியா ஏர் போட்டிலிருந்து'' என்றாள் நிலா அமைதியாக.
''வாவ்...ஹனிமூனுக்கு வந்து இருக்கியா'' என குதூகலித்தாள் நீரஜா.
''என்னை வந்து கூட்டிப்போக முடியுமா? இல்லை நான் டாக்சி பிடிச்சு வரட்டா?''அமைதியாக கேட்டாள் நிலா.
''இல்லை...இரு அங்கேயே இரு நான் வந்துடுறேன், இன்னும் இருபது நிமிஷத்தில். அதுவரை எந்த வண்டியிலேயும் ஏறாதே'' என்று அவசரமாகச் சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள். நிலா அவளது வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
VOCÊ ESTÁ LENDO
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...