அத்தியாயம் 17
''எங்கேடா உன்னோட ஆத்துக்காரி? என்னோட பிரச்சனையில அவங்களுக்கு ஒரு ஹலோ கூட சொல்லலை." கீர்த்தி சுற்றிலும் கண்களை சுழல விட்டான்.
''அதுக்கு என்ன இப்போ சொல்லிடு..! நீ அழுததும் அவ அப்செட்டாயிட்டா. இரு கூப்பிடுறேன்..நிலா..'' உள்ளே பார்த்து குரல் கொடுத்தான். நிலா வெளிறிய முகத்தை மறைக்க சிரமப்பட்டவளாக வந்தாள்.
''இதோ என்னோட ஆத்துக்காரி..என்னை ஆட்டுவிப்பவள்'' என அழகாக சிரித்தான் அக்ஷய்.
''வணக்கம் மேடம்! உங்க மேரேஜுக்கு வரமுடியலை! இவன் என்னை பத்தி ஒரு சென்டிமீட்டராவது சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்..! என்னோட டென்ஷன்லே உங்களுக்கு சரியா ஹலோ கூட சொல்லலை. எனிவே எப்படி இருக்கான் என் பிரண்டு? அவனோட சேர்ந்த லைஃவ் எப்படி போகுது?"
''ச...சந்தோஷமா இருக்கேன்'' என்றாள் திணறலோடு கிளம்பிய நாவை இழுத்து பிடித்து மடக்கியபடி.
''இருக்காதா பின்னே? அக்ஷய் போல ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க நீங்க கோடி புண்ணியம் செய்திருக்கணும்.'' கீர்த்தி பெருமையாகச் சொல்ல,
''ஏது? நம்ம மானேஜர் புண்ணியகோடியை கும்பிட்டிருக்கணும்னு சொல்றியா?'' அக்ஷய் சிரிப்புடன் கேட்டான்.
''அட நீ வேற..! கிண்டல் பண்ணாதேப்பா! எத்தனை கோயில் ஏறி இறங்கி இருப்பாங்களோ உன்னை கணவனாக அடைய என்ற அர்த்தத்தில் சொன்னேன்."
''டேய் சும்மா ரீல் விடாதே! நான் இல்லைன்னா இன்னொருத்தன்! ஏதோ எனக்கு மட்டும் கடவுள் ஏதாவது ஸ்பெஷலா படைச்ச மாதிரி பேசுறே."
''அப்படித்தான்னு வைச்சுக்கோயேன்..உன் மனசு, உன் குணம், உன் திறமை இது எல்லாம் மத்தவங்களை விட சிறப்பாகத்தான் கடவுள் படைச்சிருக்கார்."
''அப்போ விட்டா நிலாவை எனக்கு பூஜை செய்யச்சொல்வே போலிருக்கு" அக்ஷய் தன் தலையை பிடிக்க
''ஆமா..! நிலா மேடம் சொன்னா நம்பமாட்டீங்க..காலேஜ் படிக்கும் போதே இவனுக்கு வர்ற அப்ளிகேசனை பார்த்து பொறாமைபட்டவன் நான்.. எதிலேயும் பயல் சிக்காததுதான் எனக்கு ஆச்சர்யம்.."
YOU ARE READING
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...