நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-5

561 16 0
                                    

அத்தியாயம் 5

இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபலமான காப்பகத்தில் வேலைக்கு சேர்ந்தாள் நிலா. அங்குள்ளோருடன் சேர்ந்து மற்றைய ஆச்சிரமங்களுக்கு டொனேசன் திரட்டுவதாகட்டும், கலை நிகழ்ச்சிகள் செய்வதாகட்டும், உணவுகள், உடைகள் வழங்குவதாகட்டும், என பலதுக்கும் அவள் உதவினாள்.

இவளது உதவி மனப்பான்மையையும் எளிமையையும் பார்ப்பவர்கள் இவளா? ஒரு தொழிலதிபரின் செல்ல மகள் என்று எண்ணி வியந்து போவார்கள்.

ஃபாஸ்ட் ஃபுட்டில் சாப்பிட்டு ரெஸ்டாரெண்டில் ஹாய் சொல்லி, பார்க்கில் கை குலுக்கி, பீச்சில கூத்தடிக்கும் இந்தக்காலத்திலே இப்படி ஒரு பெண்ணா? என்று ஆச்சர்யப்படுவதுமுண்டு. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் இருக்கும் மன நிறைவு, அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலேயும் இல்லை என்பாள். மனநிறைவான வாழ்க்கை, அன்பான குடும்பம், என்று அமைதியாக போய்க்கொண்டிருந்தவளின் வாழ்க்கையில் விழுந்தது இடி அல்ல பேரிடி.

பெங்களுரில் நடைபெறும் திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கென திரையுலகமே திரண்டு வந்திருந்தது. இப்படிபட்ட பிரபலங்கள்  குவியும் இடத்துக்கு நிதி திரட்ட சென்றால் நிறைய வரும். அவர்களும் தங்களது கௌரவத்திற்காக பார்த்தும் பாராமலும் செக் புக்கை கிழிச்சு தள்ளுவார்கள். எப்பவாவது வரும் இப்படியான சந்தர்ப்பங்களை பயன்படுத்தினால் தான் உண்டு என்று நிலா தன் படையுடன் கிளம்பிவிட்டாள். அவளது கேங்கில் மூன்று நடுத்தர வயதினரும், மிகுதி இளமங்கையருமாக மொத்தம் எட்டுப்பேர். ஒரே மாதிரியான புடவை அணிந்துகொண்டனர்.

பெங்களுருக்கு ரயிலில் சென்றனர். அவர்களது காப்பகத்தின் பேட்ஜை பார்த்ததும் தாமாகவே முன்வந்து அன்பளிப்பு செய்தனர் சிலர்.
நிலா நினைத்தது போல நிதியும் திரண்டது. அடுத்த நாளே தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானோர், அனாதைக் குழந்தை ஆச்சிரமங்கள் என்று வகையாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகை பிரித்து அனுப்பிவிட்டு மன நிறைவோடு அதற்கு அடுத்த நாள் காலையில் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா Where stories live. Discover now