17 காதல் காப்பாளன்...?

622 51 4
                                    


17 காதல் காப்பாளன்...? (நீண்ட அத்தியாயம்)

காலை முதல் கொண்டு நந்தாவை கவனித்துக் கொண்டுதான் இருந்தான் அர்னவ். அவன் பதட்டமாய் காணப்பட்டான், என்றும் இல்லாத அளவிற்கு...! அது அவன் முகத்திலேயே வெட்ட வெளிச்சமாய் தெரிந்தது.

"நந்து... ஏதாவது பிரச்சனையா?"

"இல்லையே... எந்த பிரச்சனையும் இல்லையே... ஏன் கேக்குற?" என்றான் திக்கி தடுமாறி.

"நீ டென்ஷனா இருக்க..."

"ஆஃபீஸ் டென்ஷன் தான்..." என்று அவன் தடுமாற்றத்துடன் கூறியது அர்னவ்க்கு சந்தேகத்தை எழுப்பியது.

உணவு மேசை

சிற்றுண்டியை சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்னவ், நந்தாவை தேடிக்கொண்டு குஷி அவசரமாய் உள்ளே ஓடி வருவதை கண்டான்.

"ஆன்ட்டி, நந்து கிளம்பிட்டானா?"

"இன்னும் இல்ல, அவன் கிளம்பிக்கிட்டு இருக்கான். என்ன விஷயம்?"

"அவன்கிட்ட லிஃப்ட் கேட்கலாம்னு வந்தேன். வேற ஒன்னும் இல்ல"

"உன்னோட பைக் என்ன ஆச்சு?"

"அது... வந்து... ஆங்... பஞ்சர்...  பஞ்சர் ஆயிடுச்சு" என்று பைத்தியம் போல் சிரித்தாள். அது அர்னவின் சந்தேகத்தை வலுப்பெறச் செய்தது.

அப்பொழுது அங்கு வந்த நந்தா, குஷியை பார்த்தான். அவர்கள் இருவரும் ஏதோ ஜாடை பேசிக்கொள்ள, அவர்கள் முகங்கள் பதற்றத்துடன் காணப்பட்டது. ஒன்றும் தெரியாதது போல் சாப்பிடுவதை தொடர்ந்த அர்னவ், அவர்களை கவனித்தபடி இருந்தான். ஏதோ தவறாய் தெரிந்தது. நிச்சயம் ஏதோ பிரச்சனை இருக்கிறது. ஏனென்றால் நந்தா எதையுமே சீரியஸாய் எடுத்துக் கொள்ளாதவன்.  அர்னவ் போல் அல்லாமல், அனைத்தையும் கூலாக கையாளக்கூடியவன்.

"அம்மா, நான் கொஞ்சம் அவசரமா போகணும். நான் வழியில ஏதாவது சாப்பிட்டுக்கிறேன்" என்றான் நந்தா.

அது அர்னவின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. ஏனென்றால் நந்தா எப்பொழுதும் வெளியில் சாப்பிட விரும்பாதவன்.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Where stories live. Discover now