20 எதிர்பாராத சம்பந்தம்நந்தாவின் திருமண வரவேற்பிற்கு பிறகு, குஷியின் மீது ஒரு கண் வைத்திருந்தான் அர்னவ். மீண்டும் விக்னேஷ் அவளிடம் வந்து பேசுவான் என்று அவன் எதிர்பார்த்தது தான் அதற்கு காரணம். ஆனால் விக்னேஷ் அவளிடம் நெருங்கவே இல்லை. அது அவனுக்கு வியப்பளித்தது... குழப்பவும் செய்தது. ஆனால், அவன் உள்மனது ஏதோ தவறாய் நடக்கவிருப்பதை அவனிடம் உணர்த்திக் கொண்டே இருந்தது.
அவன் எதிர்பார்த்ததுபடியே, பத்து நாட்களுக்குப் பிறகு, பெசன்ட் நகர் கடற்கரையில்...
வழக்கம்போல் ஜாகிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ஷஷி. அப்பொழுது அவரை நோக்கி ஒருவர் வந்தார். அவரிடம் கைக்குலுக்கலுக்காக கையை நீட்டினார். புன்னகைத்தபடி அவருடன் கை குலுக்கினார் ஷஷி.
"என் பேர் கணேஷ்... விக்னேஷ் டெக்ஸ்டைல்ஸ் ஓனர். உங்களுக்கு என்னை தெரியும்னு நினைக்கிறேன், சார்...!"
"ஓ, எஸ்... நல்லா தெரியும்..."
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்... உங்களுக்கு டைம் இருக்கா?"
"எதைப் பத்தி?"
"என்னோட சன் விக்னேஷை பத்தி"
"ஓஹோ... அவர் எப்படி இருக்காரு?"
"அவன் இப்போ ஒரு புது மனுஷனா மாறிட்டான்... உங்க டாட்டரால..."
அவரை குழப்பத்துடன் பார்த்த, ஷஷி துணுக்குற்றர்.
"நான் உங்ககிட்ட எதையும் மறைக்க விரும்பல. அவன் பொறுப்பில்லாம தான் இருந்தான். எதையும் பத்தி கவலைப்படாம ஊரை சுத்திக்கிட்டு, வேண்டாத வேலையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தான். ஆனா இப்போ, சமீபத்துல பிசினஸ்ல ரொம்ப ஆர்வமா இருக்கான். லைஃப்ல செட்டில் ஆகணும்னு அவனுக்கு எண்ணம் வந்திருக்கு. அவனோட நடவடிக்கை தலைகீழா மாறிடுச்சு. உறுதியான ஒரு காரணம் இல்லாம அது நடந்திருக்காதுன்னு எனக்கு தெரியும். அப்போ தான், அவன் உங்க மகளை விரும்புறதா சொன்னான். அவனுக்கு இப்பவாவது வாழ்க்கையோட மதிப்பு தெரிஞ்சதேன்னு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்"
ESTÁS LEYENDO
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...