44 தித்திக்கும் தீ...!
குஷியை தன் கையில் ஏந்திக்கொண்டு தங்கள் அறைக்கு வந்தான் அர்னவ். அவளைக் கீழே இறக்கிவிட்டு கதவை சாத்தி தாளிட்டான்.
"உனக்கு எவ்வளவு தைரியம்!"
தன் ஆள்காட்டி விரலை அவள் உதட்டில் வைத்து,
"ஷ்ஷ்... போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ, குஷி..." என்றான்.
ஒன்றும் கூறாமல் தனது உடையை அலமாரியில் இருந்து எடுக்க சென்றாள் அவள். நனைந்திருந்த தனது சட்டையை அவிழ்த்து, அதை ஸ்டாண்டில் மாட்டிவிட்டு திரும்பிய அவன் கண்ணில் அவளது ஈர வடிவம் அனலை மூட்டியது. ரோஜா மலர் நீல நிறத்தில் இருந்தால் இப்படித்தான் இருக்குமோ...? அதுவும் அது மழையில் நனைந்திருந்தால்...? இல்லை ரோஜா மலர் மழையில் நனைந்திருந்தால் கூட இவ்வளவு அழகாய் இருக்காது. புடவை என்னும் உடையை கண்டுபிடித்தவன் மகா ரசிகனாய் இருக்க வேண்டும். மறைத்தும், மறைக்காமலும் என்ன ஒரு கவர்ச்சி! அதிலும், மழையில் நனைந்து அது உடலோடு ஒட்டிக் கொண்டு விட்டால், எதிரில் இருப்பவன் சாக வேண்டியது தான்! அப்படித்தான் செத்துக் கொண்டிருந்தான் அர்னவ். இதுவரை அவன் காணாததை எல்லாம் அவன் கண்ணுக்குக் கொடுத்தது அந்த புடவை. மென்று விழுங்கிய அவன், தன் பார்வையை வேறு பக்கம் திருப்ப முயன்றான். ஆனால் அந்த முயற்சியில் அவன் படு தோல்வி அடைந்தான். இனம் புரியாத ஒரு வலி அவன் உடலை வருத்தியது.
அவன் படும் பாட்டை அறியாத அவள், தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றாள். அவள் கதவை திறக்க அதன் கைப்பிடியை பற்ற முயன்றாள். ஆனால் ஒரு இரும்பு கரம் அதன் கைப்பிடியை முந்திக்கொண்டு பற்றி கதவை இழுத்து மூடியது. அந்த கைப்பிடியில் கண் வைத்திருந்த அவனை திரும்பி பார்த்தாள் குஷி.
"என்னை எதையும் செய்ய விட மாட்டியா நீ?"
தன் கண் இமைகளை மெல்ல அவள் முகத்தை நோக்கி உயர்த்தினான் அவன். அவனது ஆழ்ந்த, கூரிய பார்வை, அவளுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அவளை விழுங்க துவங்கி விட்டிருந்த, நிலைகுத்திய பார்வையுடன் அவளை நெருங்கினான். தாங்க முடியாத அவனது பார்வையால் நடுக்கத்துடன் பின்னோக்கி நகர்ந்தாள். அந்த அறையின் சுவர், அவளை மேலே முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி, அவனுக்கு சேவகம் புரிந்தது. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அவளது இதயம் வேகமாய் துடித்தது. அந்த இடம் விட்டு செல்ல அவள் முயன்றாள். ஆனால் அவளை அப்படி செய்யவிடாமல், அவனது இரும்பு கரம், அவளை பிடித்து இழுத்து பழைய நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. சுவருக்கும் தன் கைகளுக்கும் இடையில் அவளை சிறை பிடித்து நிறுத்தினான். இதை அவன் ஏற்கனவே பல முறை செய்திருந்த போதிலும், இந்த முறை அதில் ஒரு பிடிவாதம் தென்பட்டது. அவனது குத்திக் கிழிக்கும் பார்வையை எதிர் கொள்ள இயலாமல், அவள் சுவரின் பக்கம் திரும்பி நின்றாள். அவனது மூச்சுக்காற்று தன் தோள்களில் உரச, இறுக்கமாய் கண்களை மூடினாள். சுவரின் மீது சாய்ந்து நின்ற அவள் மீது சாய்ந்து, அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
ESTÁS LEYENDO
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...