3 அம்மாக்களின் விருப்பம்சமையலறையில் இருந்து வரவேற்பறைக்கும், வரவேற்பறையில் இருந்து ஸ்டோர் ரூமுக்கும் பரபரப்பாய் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்த ரத்னாவை பார்க்குமாறு அர்னவிடம் ஜாடை காட்டினார் அரவிந்தன்.
அவரைப் பார்த்து சிரித்த அர்னவ்,
"அவங்களுக்கு என்ன பா ஆச்சு?" என்றான்.
"அவ என்ன சொன்னான்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"
உதடு மடித்து, புருவம் உயர்த்தி, அவன் இல்லை என்று தலைசைத்தான்.
"என்னோட டைமை உன்னை யுட்டிலைஸ் பண்ணிக்க சொன்னால்ல? போற போக்கை பார்த்தா, கரிமா இங்க வந்துட்டா, நமக்கு தான் உங்க அம்மாவோட டைம் கிடைக்காது போல இருக்கு. நடக்குதா இல்லையா பாரு"
"அவங்க ஃப்ரெண்ட்ஷிப் உங்களைவிட ஒன்றும் குறைஞ்சது இல்லையே!" என்றான் நந்து கிஷோர்.
"நந்து சொல்றது சரி தானே!" என்றான் அர்னவ்.
"அதுல எந்த சந்தேகமும் இல்ல. அவங்க ரெண்டு பேரும் குடும்பத்தை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு நிராதரவா வந்து நின்னப்போ, ரத்னா தான் அவங்களுக்கு சப்போட்டா இருந்தவ"
"அப்படியா பா?" என்றான் நந்தா ஆச்சரியத்துடன்.
"ஆமாம், அவங்க காதலுக்கு கரிமா வீட்ல ஒத்துக்கல. அதனால அவளை மும்பையில் இருந்த நம்ம கோட்ரசுக்கு கூட்டிகிட்டு வந்துட்டான் ஷஷி. நாங்க தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். மிலிட்டரி ஃபார்மாலிட்டிஸ் எல்லாத்தையும் முடிச்சு, அவங்களுக்கு தனி வீடு கிடைக்கிற வரைக்கும், கரிமா நம்ம வீட்ல தான் தங்கி இருந்தா"
"ஓஓஓஓ... அவங்களோடதும் லவ் மேரேஜ் தானா?" என்றான் நந்துகிஷோர் கிண்டலாய்.
"ஆமாம், அவங்களும் எங்களை மாதிரி தான். ஆனா நாங்க எங்க பேரன்ட்ஸ் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவங்களுக்கு அது இன்னும் கூட கிடைக்கல"
"இன்னும் கூடவா?"
"ஆமாம். ரெண்டு பேரும் கிட்டத்தட்ட அவங்க குடும்பங்களையே மறந்துட்டாங்க. கரிமாவோட அம்மா இறந்ததப்போ, அவளை அவங்க அம்மாவை பார்க்க கூட விடல அவங்க அண்ணன். நானும் ஷஷியும் சண்டை போட்டு தான் அவளை அவங்க அம்மாவை கடைசியா ஒரு தடவை பார்க்க வச்சோம்"
ВИ ЧИТАЄТЕ
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Романтикаகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...