21 நடக்க விடமாட்டேன்
பெசன்ட் நகர் கடற்கரை
சக்திக்காக காத்திருந்தான் அர்னவ். அவனது பொறுமை இழந்த இருபத்தி ஐந்து நிமிட காத்திருப்பதற்குப் பிறகு, சக்தி வந்தான்.
"இன்னா வாத்தியாரே...!"
"சக்தி நீ எனக்காக ரொம்ப முக்கியமான ஒரு வேலை செய்யணும்"
"சொல்லு வாத்தியாரே, இன்னா வேணா செய்றேன்"
"உன் ஏரியாவுல இருக்கிற தியேட்டர்ல விக்னேஷை நீ எந்த பொண்ணு கூடயாவது பார்த்தா, அதை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பு"
ஏதோ தவறாக நடந்திருக்க வேண்டும் என்பது சக்திக்கு புரிந்தது. அது குஷி சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் இருக்கும் என்று அவன் கணித்தான்..!
"நிச்சயமா அனுப்புறேன் வாத்தியாரே, ஆனா, நான் அவனைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே..."
"ஏன், இப்போ நீ அந்த ஏரியாவில் இல்லையா?"
"நான் அதே ஏரியாவுல தான் இருக்கேன். அதே தியேட்டர் முன்னாடி தான் உக்காந்து இருப்பேன். என் தோஸ்துங்க கூட அவனைப் பத்தி கேட்டானுங்க. அவன் இப்பல்லாம் அங்க வர்றதே இல்ல. அவன் நல்லவனா மாறிட்டான்னு நினைக்கிறேன்"
"இல்ல... அவனெல்லாம் மாறவே மாட்டான்" என்றான் எரிச்சலாக.
"அவன் மாறினா நல்லது தானே? அதுல என்ன தப்பு இருக்கு?"
"அவன் மாறிட்டதா சொல்லி எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கான்"
"ஆனா உனக்கு தான் அவனைப் பத்தி தெரியுமே... அப்புறம் நீ ஏன் கவலைப்படற? எப்படியும் நீ அவனை நம்ப போறதில்ல இல்ல?
"என்னை அவனால ஏமாத்த முடியாது. ஆனா எல்லாரும் அவனை கண்மூடித்தனமா நம்புறாங்க"
"எல்லாருமா? நீ யாரை சொல்ற பா?"
"வேற யாரு? குஷியும் அவளோட அப்பா அம்மாவும் தான்"
"ஆமாம்பா, நான் கூட பார்த்தேன், அந்த பொண்ணு அவனை அவங்க அப்பாகிட்ட கூட்டிகினு போய் பேசிகிட்டு இருந்தது. அவன்கிட்ட அந்த பொண்ணு ஜாக்கிரதையா இருக்கும்னு நினைக்கிறேன்..."
CZYTASZ
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romansகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...