31 சாக்லேட் கணவன்
தன் அலமாரியில் இருந்த அர்னவ்வின் ஏடிஎம் கார்டை பார்த்த ரத்னாவின் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. ஆம் அவர் அதை அவனிடம் கொடுக்க மறந்து போனார். அவனும் அதை கேட்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு வந்தார். அங்கு குஷியும் லாவன்யாவும் தங்களுக்கு மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கல்லூரிக்கு செல்ல துவங்கிவிட்டார்கள்.
"குஷி..."
"சொல்லுங்க ஆன்ட்டி"
"இது அர்னவ்வோட கார்டு. நான் இதை அவன்கிட்ட திரும்ப கொடுக்க மறந்துட்டேன். உன்னோட கல்யாண புடவையும் தாலியும் வாங்குன பில், இது கூடவே இருக்கு. இதை அவன்கிட்ட கொடுத்துடு"
குஷியின் முகத்தில் குழப்ப ரேகை படர்ந்ததை கவனித்தார் ரத்னா. அதற்காகத்தானே அவர் வேண்டுமென்றே அதை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார்...!
"அவனுடைய கார்டுல தான் நாங்க உன் கல்யாண புடவையும் தாலியையும் வாங்கினோம். ஏன்னா நீ அவனுக்கு சொந்தமாகும் போது, நீ அவன் புடவையை கட்டி இருக்கணும்னு அவன் விரும்பினான்"
"வாவ்... ஹொவ் ரொமான்டிக்...!" என்று குஷியை பார்த்து கண்ணடித்தாள் லாவண்யா.
"அவன் உண்மையிலேயே அப்படி சொன்னானா? இல்ல, இது உங்களோட ஊகமா?" என்றாள் குஷி நம்பிக்கை இல்லாமல்.
"அட, அவனே என்கிட்ட சொன்னான். என் மேல உனக்கு நம்பிக்கை இல்லன்னா, நீயே அவனை கேட்டுப் பாரு"
ரத்னாவை பார்த்து பொருள் பொதிந்த புன்னகை சிந்தினாள் லாவண்யா. அதற்குப் பிறகு ஒரு நொடி கூட அங்கு தாமதிக்கவில்லை குஷி. தங்கள் அறையை நோக்கி விரைந்தாள்.
அர்னவ் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால் வந்து நின்றாள் குஷி. அவள் வந்ததை உணர்ந்து கொண்ட அவன், வழக்கம் போல் அவளுடன் விளையாடலாம் என்று பின்னால் திரும்பினான். ஆனால் அவள் கையில் இருந்த தன் ஏடிஎம் கார்டை பார்த்து திகைப்படைந்தான். அவனுக்கு தெரியும், அவனது அம்மா வேண்டுமென்றே தான் அதை அவளிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். தாக்குதலுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டான்.
BẠN ĐANG ĐỌC
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Lãng mạnகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...