10 நான் ஒட்ட வைப்பேன் (நீண்ட அத்தியாயம்)
மறுநாள் காலை
குஷியின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்ஸை பார்க்க, தனது மடிக்கணினியை திறந்தான் அர்னவ். ரத்னாவின் வாட்ஸாப்பை, தனது மடிக்கணினியில் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தி இணைத்து வைத்திருந்தான் அர்னவ். குஷியின் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்ஐ பார்த்த அவனது மனம் பரிதவித்தது.
உடைந்துவிட்ட கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் அது முன் போல் இருப்பதில்லை...!
அலுவலகம் செல்ல கிளம்பி வந்தான் அர்னவ்.
"நந்து, கரிமாவும், ஷஷி அண்ணனும் கோவிலுக்கு போயிருக்காங்க. குஷிக்கு பிரேக்ஃபாஸ்ட் கொடுக்க சொல்லி என்கிட்ட சொல்லிட்டு போனாங்க. டேபிள் மேல இருக்கிற பாக்ஸை கொண்டு போய் அவகிட்ட குடுத்துடு" என்றார் ரத்னா.
"சாரி மா. எனக்கு ஏற்கனவே லேட் ஆயிடுச்சு. கரெக்ட் டைமுக்கு போகலன்னா என் பாஸ் என்னை குதறிடுவாரு..." என்றபடி தன் பையை எடுத்துக்கொண்டு ஓடிப் போனான் நந்தா.
"இந்த பையனை நான் என்ன செய்யறது?" என்றபடி அந்த டப்பாவை தன் கையில் எடுக்க போனார் ரத்னா.
"நான் குடுத்துட்டு வரேன்" என்றான் அர்னவ்.
"நெஜமா தான் சொல்றியா அரு?" என்றார் வியப்புடன்.
ஏன்? என்பது போல் அவன் அவரை பார்க்க,
"அவ ரொம்ப பேசுவா... உனக்கு பிடிக்காது... அதனால கேட்டேன்" என்றார் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.
அவருக்கு பதில் கூறாமல் அந்த டப்பாவை எடுத்துக் கொண்டு சென்றான் அர்னவ். குஷியின் வீட்டுக்கு வந்து, அழைப்பு மணியை அழுத்தினான். கதவை திறந்த குஷி, திகைத்து நின்றாள்.
"அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்ல" என்றாள் எங்கேயோ பார்த்துக் கொண்டு.
"தெரியும். அம்மா இதை உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க"
தான் கொண்டு வந்த டப்பாவை அவளிடம் நீட்டினான். அந்த டப்பாவை பற்றிய குஷி, அதை அவன் விடாமல் இறுக்கமாய் பற்றி கொண்டிருப்பதை பார்த்து, தன் கண்களை உயர்த்தி, தன்னையே உறுதியாய் பார்த்துக் கொண்டிருந்த அவனை பார்த்தாள். தன் வீட்டுக்குள் நுழைந்த அவனை பார்த்து குழம்பினாள்.
VOCÊ ESTÁ LENDO
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...