12 சிறிய வயதில் நண்பன்

682 47 4
                                    

12 சிறிய வயதில் நண்பன் ( நீண்ட அத்தியாயம்)

அன்று இரவு முழுவதும், அர்னவ்வையும் அஞ்சலியையும் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள் குஷி. அவளுக்கு அர்னவ் பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும்.  ஆனால் அஞ்சலியிடம் எப்படி கேட்பது? ஏன் கேட்கக்கூடாது? அஞ்சலிக்கும் கூட அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றே தெரிகிறது. ஒருவேளை அஞ்சலி அவனைப் பற்றி ஏதாவது கேட்டால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தாள் குஷி. அதற்காக, அது தானாகவே நடக்கட்டும் என்று அவள் சும்மா இருக்க முடியாது. அதற்கான முயற்சியை தானும் மேற்கொள்வது என்று முடிவுக்கு வந்தாள்.

செயின்ட் பிஷப் லியோ கல்லூரி

எதிர்பார்த்தது போலவே குஷியை அழைத்தாள் அஞ்சலி. அவளைக் காண கணினி ஆய்வு கூடத்திற்கு சென்றாள் குஷி. அஞ்சலி எதையோ எண்ணி, தனியாய் சிரித்து கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஒரு நினைவில் மூழ்கி இருப்பதாய் தெரிந்தது. குஷியை அங்கு பார்த்த அஞ்சலி, அவளை உள்ளே வரும்படி சைகை செய்தாள்.

"உட்காரு, குஷி"

அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் குஷி.

"உன்னோட ப்ராஜெக்ட் பத்தி ஏதாவது யோசிச்சியா?"

"என்ன மேடம் அவசரம்? அது அடுத்த வருஷத்துக்கான ப்ராஜெக்ட் தானே?"

"எக்ஸாம் வரப்போகுது. அது முடிஞ்சதுக்கு பிறகு, நீ ஃப்ரீயா இருப்ப. இப்பவே என்ன பண்ண போறேன்னு முடிவு பண்ணிட்டா, அந்த லீவை யூஸ் பண்ணிக்கலாம் இல்லையா?"

"ஆமாம், மேடம். ஆனா, நான் இன்னும் அதைப் பத்தி யோசிக்கல"

"உன் கூட ஒரு சூப்பர் பிரைன் இருக்கும் போது நீ ஏன் அதை பத்தி கவலைப்படற?"

நிமிர்ந்து அமர்ந்தாள் குஷி. அஞ்சலி சரியான திசையில் பயணம் செய்வது அவளுக்கு புரிந்தது.

"நீங்க யாரைப் பத்தி மேடம் பேசுறீங்க?"

"வேற யாரைப் பத்தி? அர்னவ்..."

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora