18 எதிர்பாராதது...

650 48 5
                                    

18 எதிர்பாராதது...

புதுமண தம்பதியரை ஆலம் சுற்றி வரவேற்றார் ரத்னா. வலது காலை வைத்து தன் மாமியார் வீட்டினுள் நுழைந்தாள் லாவண்யா.

கரிமாவிடம் ஒரு டம்ளர் பாலையும் ஒரு வாழைப்பழத்தையும் கொடுத்து, புதுமண தம்பதியருக்கு கொடுக்கச் செய்தார் ரத்னா. அது, அத்தை முறை உள்ளவர்களால் கொடுக்கப்பட வேண்டும் என்பதால்...! வாழைப்பழத்தையும், பாலையும் இருவரையும் பகிர்ந்து கொள்ள செய்தார் கரிமா, அவர்களது வாழ்க்கையில், இனி அனைத்தையும் அவர்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை குறிக்கும் வண்ணம்.

ஜோசியரின் வருகைக்காக பெரியவர்கள் காத்திருந்தார்கள். அவர்களுடைய திருமண வரவேற்பு தேதியையும், முதலிரவு தேதியையும் முடிவு செய்வதற்காகவும். அருகில் இருந்த அறையில் மணமக்கள் இருக்கவைக்கப்பட்டார்கள். எல்லாம் அவசர அடியில் நடந்ததால், மிகவும் பரபரப்பாய் காணப்பட்டார் ரத்னா.

"கடவுளே! என்ன செய்யறதுன்னு தெரியலையே...! சாப்பாடு வேற செய்யணும்..."

"ஏன் டென்ஷன் ஆகிற ரத்னா? நான் தான் இருக்கேன் இல்ல?"

"சரி, நானும், கரிமாவும் சாப்பாடு செய்யுறோம். அதுவரைக்கும், நந்து நீ உன்னோட ரூமுக்கு போ... குஷி, நீ லாவண்யா கூட இரு. சரியா?"

"சரிங்க ஆன்ட்டி" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.

வெட்கத்துடன் தலை சொறிந்தான் நந்தா.

"ஐயோ பாவம்...! கவலைப்படாதே, இதெல்லாம் ராத்திரி வரைக்கும் தான். அதுக்கப்புறம்... அஹம் அஹம்..." லாவண்யாவின் காதில் கூறி இருமினாள் குஷி.

லாவண்யா அதற்கு ரியாக் செய்யாமல் இருந்ததை பார்த்து அவள் குழப்பமுற்றாள். ரத்னாவின் கரத்தைப் பற்றிய லாவண்யா,

"அம்மா..." என்றாள்.

அவள் தன்னை அம்மா என்று அழைத்ததை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ரத்னா,

"சொல்லுடா" என்றார்.

"நான் நந்து கிட்ட கொஞ்சம் பேசணும்னு. உங்க பர்மிஷன் கிடைக்குமா?"

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Où les histoires vivent. Découvrez maintenant