46 செயலும் பேசும்

798 44 3
                                    

46 செயலும் பேசும்

அர்னவ் தன் மனைவியுடன் நெருக்கமாய் இருந்ததை நிஷாவால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. தனது சாபம் பலிக்கவில்லை என்பதற்காக மட்டும் அவளுக்கு எரிச்சல் ஏற்படவில்லை, அர்னவ் தன் திருமண வாழ்க்கையில்  மகிழ்ச்சியோடு இருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. தன்னைவிட அழகான ஒரு மனைவி அவனுக்கு கிடைத்திருந்தது வேறு அவளை உயிரோடு கொன்றது. பொது இடத்தில் அனைவரது முன்னிலையிலும் அவன் அவமானப்படுவதை பார்க்க வேண்டும் என்று நினைத்தாள் அவள். குஷிக்கு கைப்பை வாங்க அவர்கள் சென்ற கடைக்கு அவளும் பின் தொடர்ந்து சென்றாள். அவள் மனதில் ஒரு கீழ்த்தரமான யோசனை உதித்தது. அங்கு பேனாக்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று, மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்றை கேட்டு பெற்றாள். அதை யாருக்கும் தெரியாமல் தனது கைப்பையில் மறைத்துக் கொண்டாள்.

குஷிக்காக கைப்பையை தேர்வு செய்து கொண்டிருந்தான் அர்னவ். அந்த பேனாவை மெல்ல அவனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள். அர்னவ் கையும் களவுமாக பிடிப்படும்போது, அவன் முகம் இருளடைந்து போவதை காண சற்று தூரத்தில் நின்று அவள் காத்திருந்தாள்.

தங்கள் பொருளுக்கான தொகையை கொடுத்துவிட்டு அவர்கள் அந்த கடையை விட்டு வெளியேறினார்கள். அங்கு வைக்கப்பட்டிருந்த சென்சார், ஒலி எழுப்பாததை பார்த்து நிஷா குழப்பம் அடைந்தாள். அது எப்படி சாத்தியம்? அவர்களைப் பின் தொடர்ந்து ஓடினாள். அவள் அந்த சென்சாரை கடந்த போது அலாரம் அடித்தது. ஒன்றும் புரியாமல் சிலை போல் நின்றாள் அவள். அவளை சுற்றி கூட்டம் கூடியது. அது அவளுக்கு அவமானத்தை தந்தது.

பெண் ஊழியர் ஒருவரை அழைத்து, அவளை சோதனை இடச் செய்தார் அந்த கடையின் முதலாளி. அவள் அர்னவ்வின் பாக்கெட்டில் வைத்த அதே பேனாவை, அந்த ஊழியர் நிஷாவின் பையில் இருந்து எடுத்தாள். நிஷா பேய் அறைந்தது போல் நின்றாள்.

"நான் பணம் கொடுக்கத்தான் நினைச்சேன். மறந்துட்டேன்" என்றாள் தட்டு தடுமாறி.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Opowieści tętniące życiem. Odkryj je teraz