40 கண்ணாமூச்சி

590 51 6
                                    

40 கண்ணாமூச்சி

குஷியை பார்க்காமல் இருக்கும் இம்சையை தாங்க முடியவில்லை அர்னவ்வால். எப்படி ஒருத்தி இவ்வளவு பிடிவாதமாய் இருக்க முடியும்? அவள் ஒவ்வொரு நாளும் அவன் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தாள், ஆனால் அவன் இல்லாத போது...! அனைவருடனும் பேசிக்கொண்டு தான் இருந்தாள், அவன் ஒருவனை தவிர. அவன் வீட்டில் சாப்பிட கூட செய்தாள்.  ஆனால் அவன் ஒரு முறை கூட அவளை பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட இருப்பது நாளாய் இது தான் நிலை. இனிமேல் தன்னால் பொறுக்க முடியாது என்று உணர்ந்த அவன், அவளது கல்லூரிக்கு சென்று, அவளை பார்க்க, வெளியே காத்திருந்தான். அவளுடைய தோழி அர்ச்சனா, கல்லூரியில் இருந்து வெளியே வருவதை கண்டான். அவனைப் பார்த்த அவள் புன்னகைத்தாள்.

"அண்ணா நீங்களா? எப்படி இருக்கீங்க?" என்றாள்.

"நான் நல்லா இருக்கேன். குஷி எங்க?"

"அவ முன்னாடியே போயிட்டாளே"

"ஆனா, நான் இங்கேயே தானே காத்துகிட்டு இருக்கேன்?"

"அவ ஒரு பீரியடுக்கு முன்னாடியே போயிட்டா"

"எதனால?"

"ஏன்னா, லாஸ்ட் பீரியட் லீஷியர். அதனால, வீட்டுக்கு போய் படிக்க போறேன்னு கிளம்பி போயிட்டா"

"ஓ... தேங்க்யூ"  என்று தன் இருசக்கர வாகனத்தை உதைத்து, அதை கிளப்பிக் கொண்டு சென்றான்.

அர்ச்சனா, நகத்தை கடித்த படி ஒரு குறிப்பிட்ட மரத்தை பார்த்தாள். அங்கு குஷியும் லாவண்யாவும் மறைந்து நின்று கொண்டிருந்தார்கள்.

"எதுக்காக நீ இப்படி எல்லாம் செய்ற குஷி?" என்றாள் அர்ச்சனா.

"அவன் இதை தான் வேணும்னு நினைச்சான்..."

"ஆனாலும் நீ அவரை ரொம்ப தான் தண்டிக்கிற" என்றாள் லாவண்யா அலுப்புடன்.

"அவன் கோயம்புத்தூருக்கு போயிருந்தா, நானும் இப்படித் தானே தண்டனையை அனுபவிச்சிருப்பேன்?" 

"உன்னோட நல்லதுக்காக தான் அவர் அதை செய்யணும்னு நினைச்சாரு"

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Where stories live. Discover now