29 சீண்டல்...
இன்னும் சற்று நேரத்தில், மீண்டும் விருந்தினர் அறையாய் மாற இருக்கும், லாவண்யாவின் அறையில், குஷியும் லாவண்யாவும் தங்கள் முதலிரவுக்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். தூய்மையின் அடையாளமான வெள்ளை நிற புடவையை அவர்கள் அணிந்திருந்தார்கள். லாவண்யாவின் முகத்தில் குதூகலமும், குஷியின் முகத்தில் பதற்றமும் தெரிந்தது.
"என்ன ஆச்சு குஷி? நீ ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?"
"இல்ல, நான் நல்லா தான் இருக்கேன்..." என்றாள் பதற்றத்துடன்.
"நெர்வஸ்ஸா இருக்கா?"
"ரொம்ப.." என்று தன் உதட்டை கடித்தாள்.
"கவலை படாதே, அர்னவ் அண்ணா ரொம்ப வைல்டா நடந்துக்க மாட்டாரு" என்றாள் கிண்டலாய்.
அதை கேட்ட குஷி அதிர்ச்சி அடைந்தாள். வைல்டா? எச்சில் விழுங்கினாள் அவள். அதைப் பற்றியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. அவனை ஒரே அறையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றித் தான் அவளது பதற்றம் எல்லாம் இருந்தது. இப்பொழுது அவளது பதற்றம் அதிகரித்தது. ஒருவேளை அவன் வைல்டாய் நடந்து கொள்வானோ? அப்பொழுது இரண்டு தம்ளர்களில் பாலுடன் அங்கு வந்த ரத்னா, அதை அவர்களிடம் கொடுத்தார்.
"இத அவங்கவங்க புருஷன் கிட்ட கொடுங்க. இதுல அவங்க பாதியைத்தான் சாப்பிடணும். மிச்ச பாதியை நீங்க சாப்பிடணும்... "
அவர்கள் சரி என்று தலையசைத்தார்கள்.
குஷியின்கைகள் நடுங்குவதை பார்த்த ரத்னா, அவள் கரத்தை அன்பாய் அழுத்தினார்.
"பயமா இருக்கா?"
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"நேத்து வரைக்கும் ரொம்ப தைரியமா இருந்தியே... இன்னைக்கு என்ன ஆச்சு?"
அவரை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் குஷி.
"ரிலாக்ஸ்... இது உன்னோட வாழ்க்கை. அதை ஃபேஸ் பண்ணு. அர்னவ் உன்னோட புருஷன்... அவனை ஹேண்டில் பண்ணு. நீ அதை செஞ்சு தான் ஆகணும். உனக்கு என்ன வேணுமோ, அதை செய்ய எல்லாம் உரிமையும் உனக்கு இருக்கு. உனக்கு பிடிக்காத எதையும் அவன் செய்ய மாட்டான். அதனால தைரியமா இரு. போ..."
ESTÁS LEYENDO
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...