26 அழகான ராட்சசன்
ரத்னாவும், குஷியும் பியூட்டிபார்லருக்கு செல்வதை பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பழச்சாறு கொண்டு வந்த லாவண்யா,
"அம்மா, எனக்கு ஒரு பியூட்டிஷியன் ஃபிரண்ட் இருக்கா. நம்ம கூப்பிட்டா வீட்டுக்கே வந்து, ஃபேசியல் பெடிக்யூர் எல்லாமே செஞ்சு விடுவா" என்றாள்.
"நிஜமாவா?" என்றாள் குஷி.
"இது நமக்கு ரொம்ப வசதியா இருக்கும் போல இருக்கே" என்றார் ரத்னா.
"அப்படின்னா, அவளையே ஃபோன் பண்ணி வரச் சொல்லு. எல்லாத்தையும் வீட்ல இருந்தே செஞ்சிக்கலாம்" என்றாள் குஷி.
"எப்போ அவளை வர சொல்லணும்?"
"இன்னைக்கு ஃப்ரீயா இருந்தா வர சொல்லேன். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, எல்லாரும் வீட்ல இருப்பாங்க" என்றார் ரத்னா.
"ஆமாம். முக்கியமா அந்த பாவக்காய் வீட்டில் இருக்கும்" என்றாள் குஷி.
அதைக் கேட்டு சிரித்த ரத்னா,
"அவன் வீட்ல இருந்தா என்ன? பாவம், அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துகிட்டு இருக்கப் போறான்... நம்மளை அவன் டிஸ்டர்ப் பண்ண மாட்டான்" என்றார்.
"அவன் நம்மளை டிஸ்டர்ப் பண்ண மாட்டான் தான்... ஆனா நம்ம அவன் ரூமை யூஸ் பண்ணா, அவன் டிஸ்டர்ப் ஆவானே..."
"என்னது? நீ அண்ணா ரூமை யூஸ் பண்ண பிளான் பண்றியா?" என்றாள் லாவண்யா அதிர்ச்சியுடன்.
"இதுல அதிர்ச்சியாகறதுக்கு என்ன இருக்கு?" என்றாள் குஷி.
"அவ சொல்றது சரி தானே? அதுல அதிர்ச்சியாக என்ன இருக்கு?" என்றார் ரத்னா.
"நீங்க நெஜமாத் தான் சொல்றீங்களா மா?"
"நெஜமாத் தான் சொல்றேன். நீ பியூட்டிஷியனை வர சொல்லு"
ஒன்றும் புரியாமல் அவர் கூறியதை செய்தாள் லாவண்யா. கைபேசியை துண்டித்து விட்டு,
"அம்மா அவ இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துடுவா. இன்னைக்கு, குஷி அவளுக்கு தேவையானதை எல்லாம் செஞ்சுக்கட்டும். நமக்கு இன்னைக்கு செஞ்சிக்க டைம் இருக்காது"
ESTÁS LEYENDO
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...