16 உண்மையில் நீ யார்?
விக்னேஷை அவ்வளவு அடித்துவிட்ட போதிலும், அர்னவ்வின் கோபம் தணிந்த பாடில்லை. மறுபடியும் விக்னேஷை பார்த்தால் அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவது என்று எண்ணியிருந்தான்.
அவனை காபி குடிக்க கீழே வருமாறு அழைத்தார் ரத்னா. தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அவன் தரைதளம் வந்தபோது, ரத்னாவும் நந்தாவும் எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
"கோவிலுக்கா? எப்ப போக போறீங்க?" என்றான் நந்தா.
"நாளைக்கு ரொம்ப நல்ல நாள். நாளைக்கு நம்ம கோவிலுக்கு போயிட்டு வந்தா, நம்ம குடும்பத்துல சீக்கிரமே கல்யாணம் நடக்குமாம்"
"அப்படின்னா தயவு செய்து மறக்காம நாளைக்கு கோயிலுக்கு போயிட்டு வந்துடுங்க" என்றான் கெஞ்சலாய் நந்தா.
"பின்ன? நான் போகாம இருப்பனா?"
'இவர்கள் ஆரம்பித்து விட்டார்களா?' என்ற முகபாவத்துடன் வந்து அமர்ந்தான் அர்னவ்.
"அரு, என்னைப் பத்தியாவது கொஞ்சம் யோசிச்சு பாரு. நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியும். அதையாவது கொஞ்சம் நினைச்சு பாரேன்"
அதைக் கேட்டு சிரித்த ரத்னா,
"அவன் சொல்றது சரிதானே? வீட்ல அண்ணன் ஒருத்தன் இருக்கும்போது தம்பி எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?"
"அம்மா, அவனுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா அவன் தாராளமா பண்ணிக்கட்டும். எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீங்க"
பெருமூச்சு விட்ட ரத்னா,
"சாரி நந்து... நீ வாழ்க்கை பூரா பிரம்மச்சாரியா தான் இருக்கப் போற" என்றார்.
"நீங்க சொல்றது தான் நடக்கும் போல இருக்கு..." என்று வருத்தத்துடன் கூறிய அவன்,
"நாளைக்கு கோவில்ல கூட்டம் அதிகமா இருக்கும். ஜாக்கிரதையா போயிட்டு வாங்க" என்றான்.
VOCÊ ESTÁ LENDO
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...