38 சுவரில் அடித்த பந்து

633 51 4
                                    

38 சுவரில் அடித்த பந்து

அர்னவ் கோவைக்கு செல்லப் போகிறான் என்ற விஷயம் குஷியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"நீ எப்போ கிளம்பணும்?" என்றார் ரத்னா.

"நாளைக்கு சாயங்காலம்... ஒரு மாசம் கழிச்சு தான் திரும்ப வருவேன்" என்றான் குஷியை பார்த்தவாறு.

ஒன்றும் கூறாமல் தன் அறையை நோக்கி சென்றாள் குஷி. லாவண்யாவும் அங்கிருந்து சென்றாள். குஷிக்காக வருத்தப்பட்டார் ரத்னா. அவள் வருத்தமாக தான் இருப்பாள் என்று அவருக்கு தெரியும்.

"எதுக்காக இந்த டெபுடேஷனுக்கு நீ ஒத்துக்கிட்ட? வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே? உன்னோட கம்பெனியில உன்னை விட்டா வேற ஆளே இல்லையா?" என்றார் ரத்னா.

அமைதியாய் நின்றான் அர்னவ்.

"குஷியை பத்தி யோசிச்சி பார்த்தியா? அவ எப்படி நிம்மதியா படிப்பா?"

"அவ படிச்சு தான் ஆகணும்"

"இல்ல அரு, நீ போறதுல எனக்கு விருப்பம் இல்ல.  நான் போகலன்னு சொல்லிடு"

"மா, தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க"

"நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற?"

"நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். அதனால தான் போறேன்"

"நீ என்ன சொல்ற?"

"நான் இங்க இருந்தா, அவ ஒழுங்கா படிக்க மாட்டா மா"

"அப்படின்னா?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நான் எப்படி எல்லாம் அவளை டிஸ்டர்ப் பண்றேன்னு அவ சொன்னாளோ, அதையெல்லாம் தான் அவ செஞ்சுகிட்டு இருக்கா. எங்க சின்ன வயசு கதை எல்லாம் பேசி என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு நினைக்கிறா... எப்படி அவ இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்கான்னு எனக்கு புரியல"

ரத்னாவுக்கு விஷயம் புரிந்து போனது.

"அப்படின்னா, நீ வேணும்முன்னே  கோயம்புத்தூர் போறியா?"

"ஆமாம். அப்போ தான் அவ ஒழுங்கா படிப்பா"

"அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா"

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Opowieści tętniące życiem. Odkryj je teraz